(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
தற்போது நடைபெற்று முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் அதீத வீழ்ச்சியையும்இஐ.தே.க ஆனது அபரிதமான வளர்ச்சியையும் கண்டுள்ளது என்பது மறுக்க முடியாத ஒரு விடயமாகும்.முஸ்லிம் பிரதிநிதித்துவம் ஊவா மாகாணத்தில் இழக்கப்பட்டிருப்பதை ஒரு பொருட்டாகவே கணக்கெடுக்காது ஐ.தே.க இனது இவ் வளர்ச்சியானது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து நிற்கும் முஸ்லிம்களிற்கு மட்டில்லா மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
எனினும் ஐ.தே.க இனது வளர்ச்சி முஸ்லிம்களினது வெற்றியாகுமா..?? என்பதை முஸ்லிம்களாகிய நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.
இன்று சில பௌத்த அடிப்படை வாதக் குழுக்கள் முஸ்லிம்கள் மீது அரங்கேற்றிக் கொண்டிருக்கும் காழ்ப் புணர்வுச் செயற்பாடுகளே அரசை ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் எதிரியாக்கியது.அந்தக் குழுக்களினது நோக்கம் முஸ்லிம்களை எதிர்ப்பது மாத்திரமே!!தங்களது விடயங்களை சாதித்துக் கொள்ள இன்று அரசுக்கு சார்பான அமைப்பு போன்று இருக்கும்.நாளை ஐ.தே.க ஆட்சி அமைக்குமாக இருந்தால் ஐ.தே.க உடன் ஒட்டிக் கொள்ளும்.இன்று ஜ.தே.க இக் குழுக்களை எதிர்ப்பது போன்று சிறு சிறு சாடைகளை காட்டினாலும் ஐ.தே.க யும் தனது தொடர்ச்சியான பயணத்திற்கு அவ்வாறான இயக்கங்களையும் அரவணைத்து தான் செல்லும்.இதுவே யதார்த்தம்.
இக் குழுக்களினது முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் மென் மேலும் தொடரத்தான் போகிறது.ஆட்சி மாற்றம் ஒரு போதும் எமக்கான தீர்வாகப் போவதில்லை என்பதை உணர்சிகளின் வேகத்தில் சிந்தனை மறந்து செயற்படும் எம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
யுத்தம் முடியும் வரை தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஸ இனது ஆட்சி முஸ்லிம்களிற்கு பாதகமாக அமைய வில்லை.யுத்தம் முடிந்த பிறகு தான் முஸ்லிம் வேட்டைக்கு சில குழுக்கள் தயாரானது.யுத்தம் முடியும் வரை முஸ்லிம் சார்புப் போக்கு சந்தர்ப்ப வாதம்.
இன்றைய ஜனாதிபதி அன்று முஸ்லிம்களிற்காக குரல் கொடுத்துள்ள அளவு இன்றைய ஐ.தே.க கொடுத்துள்ளதா??என்பது சந்தேகம்.பலஸ்தீனத்தில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பெயரில் ஒரு வீதியே உள்ளதாம்.ஆனால் இன்றைய மகிந்த ராஜ பக்ஸ தலைமையிலான அரசுக்கு சில நாட்கள் முன்பு பலஸ்தீனத்தில் நடந்த கொடுமைகளை கண்டிக்கக் கூட இயலாத நிலை.ஐ.தே.க காலத்தில் முஸ்லிம்களிற்கு நடந்த கொடுமைகளை பாதனியினுள் மறைத்து வைத்து வெளி நாடுகளிற்கு கொண்டு சென்றாராம்.இவ்வாறானவரை ஜனாதிபதியாக கொண்ட இவ் அரசில் முஸ்லிம்களின் நிலை??
இதிலிருந்து நாம் பெற வேண்டிய படிப்பினை சந்தர்ப்ப வாதங்களை தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக அமர்த்துவதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மிகப் பாரிய பங்காற்றி இருந்தார்.ஆனால்இஇன்று ஜனாதிபதியை ஆட்சி பீடத்தை விட்டு இறக்க முயற்சித்து வருகிறார்.
இன் நிகழ்வு உணர்த்தும் படிப்பினைஇ'ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பிஇகடந்த பிறகு நான் யாரோ?நீ யாரோ??' என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.
இப்போது ஐ.தே.க முஸ்லிம்களின் தோழன் போன்று இருக்கும் நாளை 'ஆற்றைக் கடக்கும் வரை அண்ணன் தம்பிஇகடந்த பிறகு நான் யாரோ?நீ யாரோ??'என்ற கதைக்கிணங்க அதன் செயற்பாடு அமையப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் தொழில் அமைச்சராக இருந்த மர்ஹூம் டி.பி ஜாயாவை புறம் தள்ளி பாக்கிஸ்தான் இலங்கை தூதுவராக நியமிக்கப் பட்டு ஐ.தே.க அரசு முஸ்லிம்களிற்கு துரோகம் இளைத்ததாம்.அவ்வாறேஇமுன்னாள் சபாநாயகர் மர்ஹூம் பாக்கிர் மாக்கார் புதிய பாராளுமன்ற கூட்டத்திலும் தன் பணிகளை தொடர விடாமல்இசபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய நிர்ப்பந்தித்ததாம் ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க.
இலங்கை முஸ்லிம்களிற்கு அரசியல் முகவரி கொடுத்த மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 'ஜ.தே.க இன் சாரதியாக ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை நான் அதில் பயணிக்க மாட்டேன்'இ''ஜ.தே.கஆட்சியமைக்குமாக இருந்தால் முஸ்லிம்கள் சொபின் பேக்கோடு வெளியேற வேண்டி வரும்'போன்ற கூற்றுக்கள் ஐ.தே.க முழுமையாக நம்பி முஸ்லிம்கள் பயணிக்க ஏதுவான ஒரு கட்சி அல்ல என்பதை ஓரளவு மட்டிட்டுக் கொள்ளலாம்.
சில சந்தர்ப்ப வாதங்களில் நாம் அகப்பட்டு விடக்கூடாது.
எமக்கு தேவையானதுஇ ஐ.ம.சு.கூட்டமைப்போஇஐ.தே.கட்சியோஇஜே.வி.பியோஇஜ.கட்சியோஇ தே.சு.முன்னணியோ அல்ல.மாறாக எமது தேவைகளை எப்போது? எதன் மூலம்?எப்படி??அடையலாம் என்பதை மிகவும் சாமர்த்தியமாக காய் நகர்த்தி சாதிப்பதே.இதற்கு முஸ்லிம்களுக்கென்று வலுவான ஒரு கட்சி அமையும் போதே சாத்தியமாகும். அக் கட்சி எதுவாகவும் இருக்கலாம்.எனினும்இமுஸ்லிம் கட்சியின் தேவையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


0 Comments