Subscribe Us

header ads

இலங்கை மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம்: ஆய்வு


இந்து சமுத்திரத்தை அண்டியிருக்கின்ற இலங்கை உள்ளிட்ட நாடுகள் மற்றுமொரு சுனாமிப் பேரலைத் தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தை சேர்ந்த கெலி ஜெக்சன் உள்ளிட்ட ஆய்வு குழுவினர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி, 9.2 ரிச்டர் அளவிலான பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சுனாமியினால், இலங்கை, இந்தியா உட்பட சுனாமி தாக்கிய நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

இதனை விட மிகப் பெரிய சுனாமி பேரலை தாக்கத்தை இந்நாடுகள் எதிர்காலத்தில் எதிர்நோக்கக் கூடும் என ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.


Post a Comment

0 Comments