சிறுவர்களை துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்காக ஒரு விசேட வேலைத்திட்டம் ஒன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளதாக அதன் பணிப்பாளர் அனோமா திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 200 கிராமங்களில் கிராமத் தலைவர்கள் ஊடாக சிறுவர்களை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமாக முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கொலை செய்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயம் என அவர் குறிப்பிட்டார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, பொலிஸ்
என அனைத்து தரப்பினரும் சிறுவர்களை பாதுகாக்க முயற்ச்த்தாலும் பெற்றோர்
தமது குழந்தைகளை பாதுகாக்கும் விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்
என அவர் தெரிவித்தார்.
-AsM-


0 Comments