இரண்டு மாத கால பயிற்சிக்காக டுபாய் நாட்டுக்குச் சென்ற மேற்கு ஆபிரிக்காவின் கமரூன் (Camaroon) நாட்டு கால்பந்தாட்ட அணியின் இருபத்தி மூன்று இளைஞர்கள், தாம் புதியதொரு அணியில் இணைவோம் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
கால்பந்தாட்டப் பயிற்சிக்காக வந்தவர்கள் இஸ்லாத்தைப் பயின்றார்கள். புனித இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்று முஸ்லிமாக வாழ ஆரம்பித்திருக்கின்றார்கள். புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே.
"பெரும்பாலும் கேளிக்கையிலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிக்க விரும்பும் இளம் வயதினரான இவர்கள் சத்தியத்தையும் ஞானத்தையும் தேடியது ஆச்சர்யமாக இருக்கின்றது" எனக் கூறுகின்றார் IACAD சிரேஷ்ட ஆலோசகர் ஜவீத் கதீப். IACAD (Islamic Affairs and Charitable Activities Department) டுபாயில் இயங்கும் தொண்டு நிறுவனமாகும்.
கமரூனில் குடும்பத்தையிழந்த, அநாதையான, வறியவர்களுக்கான கால்பந்தாட்ட அகாடமியின் இளைஞர்கள் இஸ்லாத்தில் காணப்படும் அமைதியினாலும் சாந்தத்தினாலும் பெருதும் கவரப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி, தம்முடன் பயிற்சியில் ஈடுபட்ட முஸ்லிம் கால்பந்தாட்ட ஆட்டக்காரர்களின் நேசமும் சகோதரத்துவமும் இவர்களின் உள்ளங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜவீத் கதீப் மேலும் கூறும்போது, "ஒரு குழுவில் இருந்து மிகப் பெரியதொகையினர் (23 பேர்) இஸ்லாத்தை ஏற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் வித்தியாசமான பின்னணிகளைக்கொண்ட பெரிய குழுக்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளன" என்றும் கூறினார்.
கமரூன் கால்பந்தாட்ட அணியினருக்கான இஸ்லாமியப் பயிற்சி இரண்டு முழு நாள் அமர்வுகளாக நடைபெற்றுள்ளது. இவ் அமர்வுகளின்போது இஸ்லாம் பற்றிய விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. ஹராம் ஹலால் தொடர்பாகவும் மது அருந்துவதைப் பற்றியும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாத்தில் இயேசு கிரிஸ்து எவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார் என்றும் வினவியுள்ளார்கள்.
இவ் அணியில் இரண்டு ஆட்டக்காரர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் இஸ்லாத்தையும் அதன் கலாசாரத்தையும் அறிவதில் ஆர்வமாக இருந்தனர் என்று ஜவீத் கதீப் குறிப்பிடுகின்றார்.
மூல செய்தி: worldbulletin
தமிழில்: Alizah


0 Comments