Subscribe Us

header ads

புத்தளத்தில் இளம் பெண்ணொருவர் எரித்து கொலை...


புத்தளம் வேப்பமடு ரஹ்மான் நகரை சேர்ந்த பெண்ணொருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரஹ்மன் நகர் வேப்பமடு 4ம் கட்டை புத்தளம் என்ற விலாசத்தை சேர்ந்த பெண்ணொருவர், தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இன்று காலை 2 மணியளவில் மரணமடைந்துள்ளார்.30 வயதான முஸ்தபா பேகம் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தப் பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். அதற்கு பின் இந்த பெண் வேறு நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபருக்கும் பெண்ணுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு காரணமாக குறித்த நபர் பெண்ணை அறை ஒன்றில் வைத்து மண் எண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி:Puttalam Today

Post a Comment

0 Comments