அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்ப அடுத்த ஓர் இரு தினங்களில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்
ஐக்கிய
நாடுகள் சபையின் 69 ஆவது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்துக் கொள்ளும்
பொருட்டு நேற்று மாலை 6.40 அளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உளிட்ட
தூதுக்குழுவினர் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுச் சென்றனர்
நியூயோர்க்கில்
நாளை ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் சபையின் 69 ஆவது பொதுச் சபை கூட்டத்
தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 24 ஆம் திகதி
உரையாற்றவுள்ளதாகவும் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி மேலும் பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஐ
நா பொதுச் சபை மாநாட்டில் உரையாற்றிய பின்னர் எதிர்வரும் 26 ஆம் திகதி
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடு திரும்பவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர்
மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.


0 Comments