புத்தளம் பிரதேசத்துக்கான ‘சக்தி News 1 St’ பிரிவின் u – report பிரஜை ஊடகவியலாளர் செயலமர்வு 2014.09.14 காலை 9.00 - 12.00 வரை, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் நடைபெற்றது. ‘சக்தி’ ஊடக வலையமைப்பின் துணை செய்தி ஆசிரியர் கே.எம். ரசூல், செய்தி பொறுப்பாசிரியர் அமில பாலசூரிய இருவரும் வளவாளர்காளாக தமிழ் சிங்களம் இரு மொழிகளிலும் இச் செயலமர்வை நடத்தினர்.
இதுவரை, 13 மாவட்டங்களில் 29 செயலமர்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் 15,000 ஊடகவியலாளர்கள் இலங்கையின் மிகப் பெரிய பிரஜைகள் ஊடக வலையமைப்பாகிய u – report இல் பதிவுபெற்றுள்ளதாகவும், அவர்களில் இருந்து சிறந்த பெறுபேற்றைக் காட்டிய பத்து u – report பிரஜை ஊடகவியலாளர்களுக்கு நிரந்தர செய்தியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கே.எம். ரசூல் The Puttalam Timesக்குத் தெரிவித்தார்.
இன்றைய செயலமர்வில் சுமார் 50 தமிழ் சிங்கள மொழிமூல ஆண் பெண் ஊடகவியல் ஆர்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றதோடு, u – report பிரஜை ஊடகவியலாளர் பதிவு விண்ணப்பத்தையும் கையளித்தனர்.
செய்தி என்றால் என்ன? செய்தியின் வகைகள், செய்திகள் கிடைக்கும் இடங்கள், சந்தர்ப்பங்கள் போன்றவை தொடர்பாக வளவாளர்கள் விளக்கமளித்தனர். “ஊடகவியலாளர்கள் சிறந்த மக்கள் தொடர்புகளைப் பேணிக்கொள்வதோடு, எல்லா தரப்பு மனிதர்களுடனும் சுமுகமான நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது மக்கள் செய்திகளை வழங்குவார்கள்” என பிரஜை ஊடகவியலாளரின் முதன்மைத் தகைமையை கே.எம். ரசூல் விளக்கினார்.
தொகுப்பும் படங்களும்: Hisham Hussain
நன்றி: The Puttalam Times
-AsM-



0 Comments