அப்போது இலங்கையிலும், இந்தியாவிலும் இருந்து முளைத்த அதன் திடீர் ஆதரவாளர்களுக்கு தலையும் புரியவில்லை... காலும் புரியவில்லை...
அந்த இயக்கத்தவர்கள் நல்லவர்களா? அல்லது அமெரிக்க தொழிலாளர்களா? என்று சந்தேகப்பட்டு ஒரு போஸ்ட் போட்டால் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் அளவுக்கு சிலருக்கு பைத்... முற்றியிருந்த காலம் அது.
முகநூல் எங்கும் அதே கொடி...
புரோபைல் போட்டோவெங்கும் அதே அமைப்பு....
அடுத்த ஐந்து வருட திட்டம் என்று ஒரு வரைபடம் வேறு...!
ஆஹா... உண்மையில் இலங்கையில் உள்ள சில சிங்களவர்கள் பயந்துபோனார்கள். காரணம் அவர்களின் வெற்றியின் வேகம்.
"அவர்கள் தான் இஸ்லாம் முன்னறிவித்த கருப்புக் கொடியேந்திய படையினர்"
என்று எமது திடீர் திடீர் முப்திகளோ உடனே பத்வா வேறு வழங்கினார்கள்.
இலங்கை, இந்தியாவில் இருந்து மொக்குத்தனமாக சப்போர்ட் செய்து செயிலுக்கு போகாதீங்கடா... என்று பல விதத்திலும் சொன்னேன்.
ஆனால், பத்வா வழங்கும் வேகத்தில் என்னை நோக்கி...
""நீ ஒரு ஷீ'ஆ அல்லது கபுர் வணங்கியாகத்தான் இருப்பாய்""
என்று புரட்சிகர பத்வா வழங்கினார்கள்.
எப்பா....
கார்ட்போர்ட் (card board) போராளிகளே...
இப்போ எங்கேயெல்லாம் போய் ஒழிந்திருக்கீங்க...???
கொஞ்சம் வெளியில் வந்து முகத்தை காட்ட வேண்டியது தானே...???
முகநூல் முழுதும் பரவியிருந்த போட்டோக்கள் இப்போது படிப்படியாக அழிந்துகொண்டு வருகின்றனவே... அப்படியாயின் நீங்கள் வழங்கிய பத்வா பிழையாகி விட்டதோ...???
ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் போரில் நல்லவர்களுக்காக இங்கிருந்து துஆ மட்டும் தான் செய்ய முடியுமே தவிர...
வேறு எதுவும் ...ங்க முடியாது என்பதை இனிமேலாவது உணர்வோம்.
வெறுமனே சீஸனுக்கு சீஸன் ஒவ்வொரு வதந்திகளுக்கும் பின்னால் சென்று சிரழிவதை தவிர்ப்போம். இன் ஷா அள்ளாஹ்.
By : JAH


0 Comments