அளுத்கம மற்றும் தர்ஹா நகரில் இருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவத்துடன்
தொடர்புடையவர்களை உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு
களுத்துறை மேலதிக நீதிவான் திருமதி அயேஷா ஆப்தீன் களுத்துறை பொலிஸாருக்கு
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அளுத்கம, தர்ஹா நகரில்
வசித்த மொஹமட் சஹீப் மற்றும் மொஹமட் ´ஹால் எனும் இருவர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின்
பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு
விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நன்றி: Daily Ceylon
-AsM-


0 Comments