Subscribe Us

header ads

ஊவா மாகாண தேர்தல் களம்


ஊவா மாகாண சபை தேர்தலுக்கான தினம் அண்மித்து வருகின்ற நிலையில் தேர்தல் களம் தற்போது தீவிர மடைந்துள்ளது.

தமது கட்சிகளின் வெற்றிக்காக அதன் அரசியல் பிரமுகர்கள் இறுதி மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக அனைவரும் தயாராக இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஷசிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்வதே அனைவரின் நோக்கமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியை எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறச் செய்வதன் ஊடாக அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் அந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளை கொஸ்லாந்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் ;போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.


முழு பதுளை மாவட்டத்திலும் 77 தோட்டங்கள் உள்ளன. அவற்றில் 37 தோட்டங்களின் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பாரிய நெருக்கடி எதிர்நோக்கப்படுகின்றது.

எனவே, மக்களின் நலனை கருத்தில் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் நோக்கில் தாம் அனைத்து சுகபோகங்களையும் துறந்து ஊவா மாகாண சபைத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியை முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: ஹிருநியூஸ்
-AsM-

Post a Comment

0 Comments