Subscribe Us

header ads

ருவன் விஜேவர்தன ராஜினாமா; ஐ தே க. யின் இளைஞர் முன்னணி தலைவர் பதவியை ஹரேன் பெனாண்டோவிற்கு விட்டுக் கொடுக்கத் தயார்


ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் பதவியை ஹரேன் பெனாண்டோவிற்கு விட்டுக் கொடுக்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லவென அர்ப்பணித்த ஹரேன் பெனாண்டோவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் பதவியை அளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்று மாலை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைக்கத் தயார் எனவும் ஆனால் ஹரேன் பெனாண்டோவிற்கு உப தலைவர் பதவி வழங்கினால் மகிழ்ச்சி என்றும் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். 

தான் நன்கு யோசனை செய்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஹரேன் பெனாண்டோ ஊவா தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

´ஹரேன் பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளார். நாம் அதனை மதிக்க வேண்டும். அதனால் என்னுடைய பதவியை அவருக்கு வழங்க நான் தீர்மானித்தேன். அது எனது தனிப்பட்ட விருப்பம். நேற்று இரவு நான் நன்கு சிந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்தேன்´ என்று ருவான் விஜேவர்த்தன அத தெரணவிடம் தெரிவித்தார்.      
நன்றி:அத தெரண
   

Post a Comment

0 Comments