Subscribe Us

header ads

உடைந்திருந்த 'யானையின்' கால்களுக்கு சிறப்பாக பரிகாரம் பார்த்த இந்த ஹரின் பெர்னாண்டோ யார்?


-ஓட்டமாவடி, அஹமட் இர்ஸாட்-

நடைபெற்று முடிவடைந்திருக்கும் ஊவா மாகான சபையின் தேர்தல் முடிவினை பார்க்கும் போது UNP யின் எதிர்கால தலைவன் என அரசியல் விமர்சகர்களால் வர்னிக்கப்பட்ட தற்போதைய வட மேல் மாகான முதலமைச்சர் தாயாசிறியினால் உடைக்கப்பட்ட யானையின் கால்களுக்கு ஊவா மாகான முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோவினால் சிறந்த முறையில் பரிசாரம் பார்க்கப்பட்டுள்ளது என்றே அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கள் காணப்படுகின்றது.

1978ம் ஆண்டு பிறந்த ஹரின் பெர்னாண்ட்டோ அவர்கள் புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவன் என்பதோடு பாடசாலை காலங்களில் சிறந்த றக்கர் விளையட்டு வீரருமாவர். அவுஸ்ரேலியாவில் தனது பட்டப்படிப்பினை முடிதுள்ள இவர் வியாரதுறையிலும் முக்கிய ஒருவராக இலங்கையில் காணப்படுவது மட்டுமல்லாமல் பதுளை மாவட்டத்தில் இருந்து மிகவும் இளம் வயதான 27 வயதில் UNP யின் மாவட்ட தேர்தல் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு இதற்கு முன்னரான ஊவா மாகான சபை தேர்தலில் ஊவா மாகானத்திலே அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று மாகானசபைக்கு தெரிவானார். அதைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு பாரளமன்ற தேர்தலில் தனது 31 வயதான இளம் வயதிலேயே இளைஞ்சர்களை நவீகாலத்துக்கேற்ப கவரக்கூடிய தனது ஆயுதமான பேச்சு திறமையினால் பதுளை மாவட்டத்தில் UNP சார்பாக அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று பாரளமன்ற கதிரையில் உட்கார்ந்தார்.

UNP யின் தூன் என வர்னிக்கப்பட்டவரும், சிறந்த பேச்சாளருமான தாயாசிறி அவர்களுடன் சிறந்த நட்பினை கொண்டிருந்த இவர் தயாசிறியின் அரசாங்கத்துடனான கட்சி தாவுதளுக்கு பிறகு UNP யில் அதிகம் செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டார். கூடுதலான UNP யின் ஊடக கருத்துக்களை இளம் வயதிலேயே வெளியிடும் வாய்ப்பினை பெற்ற இவர் அதன் மூலம் மக்கள் மத்தியிலும் இளைஞ்சர்கள் மத்தியிலும் அதிகம் பேசப்படும் ஒரு காதாநாயகனாக தோற்றம் பெற்றார். இதன் அடிப்படையிலேயே UNP யின் அதி உயர் பீடம் ஒருங்கினைந்த முடிவுடன் எவ்வாறு அரசாங்கம் தயாசிறியை முதலமைச்சர் வேட்பாளராக வட மேல் மாகானத்தில் களமிறக்கியதோ அதைப் போன்று இம்முறை UNP சார்பாக ஊவா மாகானத்தில் இவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.

பலகோணங்களிலும் பலம் பொருந்திய இந்த அரசாங்கத்துடன் கம்பெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் ஆக முடியாது என்று இருந்தாலும் சஜித், ரனில், மங்கள ,கரு, அத்தநாயக்க, ரவி போன்றோர்களின் கட்சியின் உட்பிரச்சனைகளுக்கும், தலைமைத்துவ போட்டிக்கும் ஒவ்வொரு நாளும் போட்டிபோட்டுக் கொள்ளும் நிலமை காரணமாக UNP யின் 20 வருடகால அரசியலில் மக்களால் சகித்துக்கொள்ள முடியாத தொடர்ந்தேர்ச்சியான தோல்வியில் முடிவடையும் தேர்தல் முடிவுகளுக்கு மத்தியில் இம்முறை ஹரின் பெர்னாண்டோவின் தலைமையில் 20 வருடகால தேர்தல்களில் இருந்து என்றும் இல்லாதவாறு UNP ஆனது நடை பெற்று முடிந்த ஊவா மாகான சபை தேர்தலில் தனது வாக்கு வங்கியினை 197708 வாக்குகளை பெற்று அதிகரிதுக் கொண்டமையும், அதாவது 2000 வாக்குகளே மாவட்டத்தில் அரசாகங்கத்தை விட குறைவாக பெற்று பாரிய அரசியல் விழிப்புனர்ச்சியை உருவாக்கியமையானது இவருடைய அரசியல் சானக்கியத்தையும், இவர்மேல் நாட்டின் இளைஞ்சர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் அப்பட்டமாக வெளிப்படுத்துவதோடு, இவர் UNP யின் முதுகெலும்புகளில் முக்கியமானர் என்றபட்டியலில் முக்கிய இடம்பிடிதுள்ளார் என்பது இங்கே முக்கிய விடயமாகும். ஹரின் மூலம் UNP அடைந்த இந்த வெற்றியை அரசாங்க அரசியல் வல்லுனர்கள் பாரிய சவாலாகவே எதிர்நோக்கவுள்ள ஜனாதிபதி, பாரளமன்ற தேர்தல்களில் தங்களுடை திட்டங்களை நடைமுறை படுத்துவார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் இலகுவாக விளக்கிக்கொள்ள கூடியதாக இருக்கின்றது.

கொழும்பு மாநகர சபையில் ஹிரூனிக்கா பிரேமசந்ர எவ்வாரு இளைஞ்சர்களின் வாக்குகளை கவர்ந்து அதிகூடிய விருப்புவாக்குகளை பெற்றிருந்தாரோ அதே பானியிலேயே இவரும் அதிகளவான இளைஞ்சர்களினதும், யுவதிகளினதும் விருப்பு வாக்குகளை நடிக, நடிகைகளை போல் தன்வசம் கொண்டுள்ள ஒரு துடிப்பானா இளம் அரசியல் வாதியாக இருப்பதும் ஒரு காரணமாக இருந்தாலும் சிங்கள சமூகத்தில் ஒரு மணிதனை சமூகத்தில் அங்கீகரிக்கும் சொல்லான !!ஆஸ்ற்றே!! எனப்படும் சமூகத்துடன் ஒன்றினைந்து பழகுவது என்ற பன்பிலும் முன்னிலையில் இருக்கும் பெயர் குறிப்பிட்டு சொல்லும் அரசியல்வாதியியுமாவார். மேலும் UNP யின் உட்பூசல்களாலும், தலைமைத்துவ போட்டிகலாலும் பாரியளவில் பிளவுபட்டிருந்த ரனில், சஜித், கரு, ரவி , மங்கள போன்றவர்களை தனது அரசியல் திறமையினாலும், கட்சியின் உறுப்பினர்கள் தன்மீது வைத்துள்ள நம்பிக்கையினாலும் இந்த தேர்தலில் ஒரே கூரையின் கீழ் ஒன்று படுத்திய பெறுமைக்குறியவராகவும் ஹரின் பெர்னாண்டோ காணப்படுவது பாரவளாக நிகழ்காலத்தில் நாட்டு மக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள விடயமாகும்.

இங்கே முக்கியமாக இம்முறை மாகான சபை தேர்தலில் UNPக்கு பதுளை மாவட்டத்தில் கிடைத்த மொத்தவாக்குகலான 197000 வாக்குகளில் ஹரின் பெர்னாண்டோவுக்கு 173993 பேர் தங்களுடைய விருப்பு வாக்குகளை அளித்தமையானது இவர் மேல் மக்கள் வைத்திருக்கும் அன்பையும் UPN மேல் தற்போது மக்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நம்பிக்கையையுமே எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் அரசியலில் பிரசித்தி அடைவதற்கு மட்டும் UNP யை பல அரசியல்வாதிகள் பயன்படுத்தியதை போன்று இவரும் எதிர்காலத்தில் முக்கியமான இடத்தை அடைந்த பிற்பாடு தான் நினைக்கும் அரசியல் உச்ச வாழ்க்கையை அடைந்து கொள்வதற்காக தனக்கு அரசியல் முகவரியினை தந்த UNPயின் யானையின் கால்களை தாயாசிறியை போன்று இவரும் முடமாக்குவாரா அல்லது UNP ஆனாது எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வெற்றியடந்து ஆட்சியை கைப்பற்ற இம்முறை யானையின் கால்களுக்கு தான் பார்த்த பரிசாரத்தை வைத்து யானையினை மேலும் குணப்படுத்தி யானையை தொடர்ந்தேர்ச்சியாக றேஸில் விடுவாரா என்பதனை இவருக்கு வாக்களித்த மக்களும் நாடும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Post a Comment

0 Comments