Subscribe Us

நாளை புத்தளத்தில் மாபெரும் வரவேற்பு ஊர்வலம்

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் வயது 17 கீழ் பிரிவில் வெங்களப் பதக்கம் (மூன்றாமிடம்) வென்ற புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி கால்பந்தாட்ட அணியினர் ஊர்வலமாக வரவேற்கப்படவுள்ளனர்.
நாளை 2014.09.29-ம் திகதி பி.ப. 4.00 மணி முதல் கொழும்பு முகத்திடலிருந்து சாஹிரா தே.க. வரை நடைபெறும் ஊர்வலம் புத்தளம் நகர் மத்தி வீதிகளின் ஊடாக அழைத்து செல்லப்படும்.

புத்தளம் நகர சபை தலைவரும் உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்கள், ஐம்மிய்யதுல் உலமா சபை, பெரியபள்ளி உள்ளிட்ட சமூகத் தலைமைகளும் சாஹிரா தே.க.வின் பழைய மாணவர்களின் அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள், வாலிபர்க் குழுக்கள் ஆகிய சிவில் சமூக அமைப்புக்களும் இவ் ஊர்வலத்தில் கலந்துகொள்ளவுள்ளன.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் வெங்களப் பதக்கத்தை வென்று ஊருக்கு நற்பெயர் பெற்றுத்தந்த மாணவர்களை வரவேற்க அனைவரும் திரண்டு வருக!!!

Post a Comment

0 Comments