ஐ.நா.சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள
அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக,
நிவ்யோர்க்கில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க, கனடா வாழ் இலங்கைத் தமிழர்களால்
ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இவ் ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை
(24) நிவ்யோர்க், ஐ.நா.காரியாலயத்திற்கு முன்புறம் நடைபெறவுள்ளது.
குறித்த தினம் பிற்பகல் 1.00 மணியில் இருந்து 5.00 மணிவரை இவ்வார்ப்பாட்டம் நடைபெறும்.
Daily Ceylon


0 Comments