மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது
இதேவேளை, தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
/JAH

0 Comments