Subscribe Us

header ads

399 கோடி ரூபா ‘வெட் வரி’ மோசடி; பிரதிவாதிகளுக்கு 20 வருட சிறை


399 கோடி ரூபா வெட் வரிப்பணத்தை மோசடிசெய்த வழக்கில், நீதிமன்றத்தை புறக்கணித்துவந்த 08 பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று 20 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், பிரதிவாதிகள் மோசடி செய்த பணத்தின் மூன்று மடங்கினை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும் நீதிபதி குமுதினி விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்..

வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் நீதிமன்றத்தினை இவர்கள் புறக்கணித்து வந்ததுடன், 08 பிரதிவாதிகள் இன்றியே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

இந்த வழக்கில் 14 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதுடன், அவர்களில் 06 பேர் வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.

நீதிமன்றத்திற்கு ஒழுங்காக சமூகமளித்த 06 பிரதிவாதிகளுக்கும் ஏற்கனவே சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments