1674 : இந்தியாவில் மராட்டிய பேரரசர் சிவாஜியின் இரண்டாவது முடிசூட்டு விழா இடம்பெற்றது.
1789 : அமெரிக்க உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1799 : வீரபாண்டிய கட்டபொம்மனும் மேலும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப். 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
1841 : புருணை சுல்தான் சரவாக் மாநிலத்தை பிரித்தானியாவுக்குக் கொடுத்தார்.
1869 : கறுப்பு வெள்ளி, ஜேய் கூல்ட், ஜேம்ஸ் பிஸ்க் என்ற இரு செல்வந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அமெரிக்கா பெருமளவு தங்கத்தை விற்பனைக்கு விட்டதால், தங்க விலை சரிந்தது.
1898 : யாழ்ப்பாணம், இணுவிலில் பெண்களுக்கான மக்லியொட் மருத்துவமனையை அமெரிக்க மிஷன் அமைத்தது.
1932: இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக சட்டசபைகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கு காந்திக்கும் டாக்டர் அம்பேத்கருக்குமிடையில் உடன்பாடு ஏற்பட்டது.
1948 : ஹொண்டா நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1950: கனடாவில் பாரிய காட்டுத்தீ பரவியது.
1960: அணுசக்தியினால் இயங்கும் உலகின் முதலாவது விமானதாங்கி கப்பலான அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ். என்டர்பிரைஸ் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1968 : ஐநாவில் சுவாசிலாந்து இணைந்தது.
1972: ஜப்பான் எயார்லைன்ஸ் விமானமொன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இறங்குவதற்குப் பதிலாக சிறிய ஓடுபாதையொன்றில் தவறுதலாக தரையிறங்கியதால் பலத்த சேதமடைந்தது.
1973 : போர்த்துக்கலின் ஆட்சியிலிருந்து பிரிவதாக கினியா பிசோ சுதந்திரப் பிகரடனம் செய்தது.
1996: முழுமையான அணுவாயுத சோதனைத் தடை ஒப்பந்தத்தில் 71 நாடுகள் கையெழுத்திட்டன.
1979 : உலகின் பொதுமக்களுக்கான முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது.
2007: மியன்மாரில் அரசாங்கத்துக்கு எதிராக சுமார் ஒரு லட்சம் பேர் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2013: பாகிஸ்தானில் 7.7 ரிச்டர் அளவிலான பூகம்பம் தாக்கியதால் குறைந்தபட்சம் 327 பேர் உயிரிழந்தனர்.
0 Comments