
பாகிஸ்தான், வங்கதேசம், பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களை, சவுதி அரேபிய ஆண்கள் மணக்க அரேபிய அரசு தடைவிதித்துள்ளது.
இது குறித்து சவுதி அரசு அதிகாரி கூறுகையில்,
'வௌிநாடுகளில் இருந்து பெண் எடுக்கும் விஷயத்தில் சவுதி அரேபிய பல
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சவுதியைச் சேர்ந்த சிலர் அதிக வயது
வித்தியாசத்தில் பெண்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அது பல சிக்கல்களை
உருவாக்கி விடுகிறது. எனவே, வௌிநாடுகளில் இருந்து பெண் எடுப்பதில் கடுமையான
விதிமுறைகளை சவுதி அரேபியா கொண்டு வந்துள்ளது,' என்றார்.
0 Comments