Subscribe Us

header ads

மோட்டார் சைக்கிளில் வரும் சைக்கோ கில்லர், இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட்டம். (இதுவரை 12 இளம் பெண்கள் பலி)

பிரேசில் நாட்டில் பெண்களைத் தேடித்தேடி கொன்று வரும் ஒரு சைக்கோ கில்லரால் பெரும் அச்சம் நிலவி வருகின்றது.
பிரேசில் நாட்டில் கொயானியா என்ற நகரத்தில்தான் அந்த மர்ம மனிதன் ஒருவன் பெண்களை தேடி, தேடி கொலை செய்து வருகிறான்.
மோட்டார் சைக்கிளில் வரும் அவன் இளம்பெண்கள் அருகில் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விடுகிறான்.
கடந்த சில நாட்களாக அவனுடைய அட்டகாசம் கொயானியா நகரில் அதிகரித்து வருகிறது. இதுவரை 12 பெண்களை அவன் கொலை செய்துள்ளான். அவர்கள் 13 வயதில் இருந்து 29 வயதிற்கு உட்பட்டவர்கள்
கடைசியாக 2 நாட்களுக்கு முன்பு 14 வயது சிறுமி ஒருவரை கொலை செய்துள்ளான். அடுத்த யாரை கொலை செய்யப்போகிறான் என தெரியாமல் பெண்கள் பீதியில் உள்ளனர்.
அவனை பிடிப்பதற்கு நகரம் முழுவதும் போலீசார் வலைவிரித்துள்ளனர். ஆனால் இதுவரை சிக்கவில்லை
ஒவ்வொரு பெண்ணை கொலை செய்யும்போதும், அவன் வெவ்வேறு மோட்டார் சைக்கிளில் வருவது தெரியவந்துள்ளது. இதனால் அவனை கண்டுபிடிப்பது போலீசாருக்கு மிகவும் கடினமாகி உள்ளது.

Post a Comment

0 Comments