Subscribe Us

header ads

ஒருங்கிணைந்த அபிவிருத்தியை நோக்கி.



- முழு நிறைவான அபிவிருத்திக்கொரு முன்மொழிவு -

புத்தளம் நகரை அபிவிருத்தி செய்வதற்காக பல குழுக்களும் தனி மனிதர்களும் பெரியபள்ளி, ஜம்இய்யதுல் உலமா சபை, நகர சபை, இளைஞர் அணிகள், இஸ்லாமிய இயக்கங்கள் என்பனவும் முயற்சித்து வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

இவர்களின் முயற்சிகளுக்கு பல்வேறு சாயங்கள் பூசப்பட்டாலும் அனைவரின் ‘இறுதி இலக்கு’ (Ultimate Goal) புத்தளம் நகரின் தனி மனித, பௌதிக, ஆன்மிக அபிவிருத்தியாகும் என்பதை இவர்களின் சமூக பங்களிப்புக்களைஅவதானிக்கும் போது தெரிகின்றது. இம்முயற்சிகள் அனைத்தின் உச்ச இலக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெறுவதாக இருக்க வேண்டும்.

இவ் அமைப்புக்கள்/ நிறுவனங்கள் அனைத்தின் இலக்கு ஒன்றாக இருப்பினும் திட்டமிடல்கள், செயற்பாடுகள் மற்றும் ஒழுங்கமைப்பு என்பன ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.

ஒருமுகப்படுத்தல்:
எந்தவொரு தனிமனிதரின் அல்லது நிறுவனத்தின் சுதந்திரத்தை பாதிக்காத விதத்தில் நடைபெற வேண்டும். பொது இலக்கு குறித்து தனி மனிதர்களும் அமைப்புக்களும் அறிவூட்டப்பட வேண்டும் என்பதை இது வலியுறுத்துகின்றது.

இவ்வறிவூட்டல் நடைபெறும் பட்சத்தில் அவர்களின் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டு தனி மனிதர்களும் அமைப்புக்களும் தமது திட்டமிடலை அதற்கேற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றது.

செயற்றிட்டமொன்று கீழ்வரும் 5 கட்டங்களை கொண்டது.
** Initiation தீட்சை (ஸ்தாபித்தல்)
** Planning திட்டமிடல்
** Execution நிர்வாகித்தல்
** Monitoring and Control கண்காணிப்பும் கட்டுப்பாடும்
** Closing நிறைவு

ஒவ்வொருவரும் செயற்றிட்டங்களைஆரம்பிக்கின்றனர். எனினும் அச்செயற்றிட்டத்தின் நிறைவை அடையாமல் இடையில் நின்றுவிடுபவையும் உண்டு.

இதனடிப்படையில் திட்டமிடல்; கலந்துரையாடல்கள் பல மட்டங்களில், ஷரீஆவின் வரையறைக்குள் நின்று நடத்தப்பட வேண்டும். இவை தொடர் நெறிப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவும் வேண்டும்.

இது ‘இரவு விடிவதற்குள்’ (Over the night) நடைபெற்று முடிபவை அல்ல. நூறாண்டுகள் கடந்துபோகும் விடயங்களும் அல்ல.

இதற்கான முன்னெடுப்புக்களை இளைஞர் அமைப்புக்களும் பள்ளிவாசல்களின்நிருவாகங்களும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

(எம்.எப்.எம். முஷ்ரிப்)

Post a Comment

0 Comments