Subscribe Us

header ads

ஆசிரியை முழந்தாளிடச் செய்தவர் ஆசிரியைக்கு கடிதம் மூலம் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் அனுப்புனர் பெயருடன்  நவகத்தேகம தேசிய பாடசாலையின் ஆசிரியைக்கு கடிதம் மூலம் இன்று (05) மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கையெழுத்தினால் எழுதப்பட்டு தபால் மூலமாக இந்த அச்சுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஆசிரியை பியானி, நவகத்தெகம பொலிஸில் செய்த முறைப்பாட்டின்படி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடிதத்தை அனுப்புபவர் ஆனந்த சரத் குமார எனவும் ´உனது சாட்சியாளரை நான் கொன்றேன். நீ பாதுகாப்பாக இரு´ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டதாகவும், ஆசிரியையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்வதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யவில்லை எனின் ´நான் ஆனந்த சரத் குமார இல்லை´ எனவும் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஆசிரியயை கூறினார்.

தனது மகளுக்கு அறிவுரை வழங்கியதற்காக ஆனந்த சரத் குமார, குறித்த ஆசிரியை பாடசாலையில் முழந்தாளிடச் செய்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் ஆனந்த சரத் குமார கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் குறித்த வழக்கின் சாட்சியாளர் ஒருவர் அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments