Subscribe Us

header ads

உள் வீட்டில் பிரச்சினை; இஸ்ரவேலில் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்



டெல் அவிவ் நகரின் ஹபிமா சதுக்கத்தில் (Habima Square) 2014.08.02 சனிக்கிழமை இரவு மக்கள் ஒன்றுகூடுவதைத் தடுப்பதற்கு பொலிசார் முயற்சி செய்த போது, மக்கள் பொலிசாரின் ஆணையைப் புறக்கணித்தனர்.இறுதியில் இக் கூட்டம் சட்டவிரோதமானது என பொலிசார் அறிவித்தனர்.

எனினும், கலவரத் தடுப்புப் பொலிசார் குவிக்கப்பட்டு, கூடியிருந்த மக்களை சதுக்கத்தை விட்டும் விரட்ட முயற்சித்த போதுதான் இதுவரை காணக்கிடைத்த மிகவும் உயிரோட்டமுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக அது மாறியது.

பொலிசார் சிலரைக் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையாகவும் நடந்துகொண்டனர். கலவர நிலை உருவானது.

வன்முறையற்ற எதிர்ப்பு ஊர்வலம், டெல் அவிவ் நகர் மத்தியில் அமைந்துள்ள டிசன்கொஃப் வீதி (Dizengoff Street)யின் ஊடாகச் சென்றது. சிலர் ஊர்வலத்தைப் பார்த்து ஏலனம் செய்தனர். சிலர் ஊர்வலத்தில் இணைந்துகொண்டனர்.

காஸாவில் நடைபெறும் மனிதப் படுகொலைகளுக்கு தமது ஆத்திரத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காக மட்டுமல்லாமல், இஸ்ரவேல் மக்களை விழிப்பூட்டும் விதமாக,
"மதிலின் இருபக்கங்களில் இருந்தும் எமக்கு யுத்தம் போதுமென்றாகி விட்டது"
"மக்களுக்குத் தேவை யுத்த நிறுத்தம்"
"காஸாவிலும் ஸ்டெரொட்டிலும் சிறுமியரை வாழவிடு" போன்ற வாசகங்கள் கூறப்பட்டன.

இஸ்ரவேலில் வாழும் போர்-எதிர்ப்பாளர்களினால் டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 500 பேர் வரை கலந்துகொண்டனர். எனினும் ஜூலை 26 ஆம் திகதி சனிக்கிழமை இரவு ராபின் சதுக்கத்தில் (Rabin Square) ஒன்றுகூடிய 5000 பேரை விட உயிரோட்டத்துடன் தமது எதிர்ப்பை இவர்கள் வெளிக்காட்டினார்கள். இந்த இரண்டு சனிக்கிழமை இரவுகளும் மக்களிடையே சிறு துளி நேர்மறைத்தன்மையை உருவாக்கியுள்ளது.

செய்தியாளர்: Leehee Rothschild 
மூலம்: http://972mag.com/ 
தமிழில்: Hisham Hussain, Puttalam
நன்றி:  Puttalam Times.
படம்: 2014.07.26 ஆம் திகதிய ஆர்ப்பாட்டத்தின் போது

Post a Comment

0 Comments