அரசியலில்
பிரவேசிப்பது தொடர்பாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய
ராஜபக்சவிடம் இருந்து தமக்கு எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று சிறிலங்கா
அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடந்த ஊடக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடனான சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச அரசியலில் பிரவேசிப்பதற்கு சாத்தியம் உள்ளதா என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர்,
அவரிடம் இருந்து அத்தகைய கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும்,
முன்னர் தாம் இதுபற்றி விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரித்து விட்டார்
என்றும் தெரிவித்தார்.
எனினும், அண்மைக்காலமாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச
ஊடகங்களுக்கு அளித்த பல செவ்விகளில், சிறிலங்கா அதிபர் அழைத்தால், தான்
அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments