மதுரங்குளி பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய குடும்பஸ்தர் ஒருவரை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில்
வைக்குமாறு புத்தளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறுமியை
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் பின்னர் தப்பிச் சென்றிருந்தவர் கைது
செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments