Subscribe Us

header ads

பத்து கோடி ஆண்டுகள் பழமைவாய்ந்த கடல்வாழ் நத்தை படிமம்!


பெரம்பலூர் மாவட்டத்தில் கடல் இருந்ததற்கான வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உள்ளன. ஆலத்தூர் தாலுகா, காரை கிராமம் வரை கடல் இருந்ததற்கு ஆதாரமாக, அப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தண்ணீரில்லா கடலின் தரைப்பகுதியைப் போல, வேறெந்த தாவரங்களும் வளராத பகுதி, பாலைவனம்போல் உள்ளது. மாவட்டத்தின் சுற்றுலா தலமான சாத்தனூர் கல்மரம் இதன் அருகில்தான் உள்ளது. கடல்வாழ் உயிரினங்களான நத்தை, கடல்குதிரை, நட்சத்திரமீன், கிளிஞ்சல்கள், சங்கு ஆகியவற்றின் பழமையான கல் படிமங்கள் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  
செஞ்சேரி இந்திராநகர் காலனிப்பகுதியை சேர்ந்த தனபாக்கியம் (28) என்பவர், தனது வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டுவைக்க குழிதோண்டியபோது, பூப்பந்து அளவிற்கு கடல்வாழ் நத்தையின் படிமங்கள் கிடந்ததைக் கண்டெடுத்தார்.
அரசு கலைக் கல்லூரியின் ஓய்வுபெற்ற முன்னாள் முதல்வரும், வரலாற்று துறைத்தலைவருமான தியாகராஜன் கூறுகையில், 'மாவட்டத்தில் வரகுபாடி, குன்னம், கொளக்காநத்தம், காரை, ஒதியம், சாத்தனூர், கண்ணப்பாடி, வெண்பாவூர் ஆகியப் பகுதிகளில், வரலாற்றில் கிரெடேசியஸ் எனப்படும் சுண்ணாம்பு படிவப் பாறைகள் காலத்தைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
செஞ்சேரியில் கண்டறியப்பட்டுள்ள நத்தையின் கூடும் கடல்வாழ் உயிரின வகை யைச் சேர்ந்ததாகும். இதுபோன்றவை 10 கோடி முதல் 15 கோடி வரை ஆண்டுகளை சேர்ந்த படிமங்களாகும் என நிலவியல் அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர் என்றார்.















































Post a Comment

0 Comments