Subscribe Us

'இப்ப இருப்பது பைத்தியக்காரர்கள் சமூகமா?"

 ராவய பத்திரிகையின் செய்தியாளர் அமைச்சர் வாசுடேவ நானாயக்காரவை பேட்டி கண்டு 10/08/2014 ஆம் தேதிய பதிவில்  4 ஆம் பக்கத்தில் போட்டுள்ளார். வாசித்துப் பாருங்கள் கோமாளித்தனமான பதிலை....
கேள்வி: நாங்கள் முதலில் ஆரம்பிப்போம் நீங்கள் ஏற்பாடு செய்த  ''சாம பா கமன" (அமைதி பாத யாத்திரை) பற்றி அதன் குறிக்கோள் என்ன?
பதில்: இனங்களுக்கிடையேசமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் அவற்றை ஸ்திரப்படுத்துவதற்கான குறிக்கோளைத்தான் நாங்கள் கொண்டிருந்தோம்.  அதற்காகத்தான் நாங்கள் இந்த '' சாம பாகமன" வை ஏற்பாடு செய்தோம். பானந்துரை சுமங்கள பாலிகா வித்தியாலயத்தின் அருகிலிருந்து ஆரம்பித்து சுமங்கள ஆண்கள் பாடசாலைக்கு முன்னால் நாங்கள் அந்த சாம பாகமன வை முடித்தோம். அது வெற்றியளித்தது.
கேள்வி: ''பாத யாத்திரை" போய் சமாதானத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியுமா?
பதில்: அப்படி ஏற்படுத்த முடியாது. நான் எண்ணவில்லை பாத யாத்திரை  போய் மட்டும் இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்று. ஆனால் பல இனங்கள் ஒன்று சேர்ந்து இவ்வாறான பாத யாத்திரைகளை செய்யும் போது அதில் ஈடுபடுவோருக்கிடையில் , அதன பார்ப்போருக்கிடையில் சகோதரத்துவத்தின் உணர்வு ஏற்படலாம்.
கேள்வி: அப்படியென்றால் அமச்சர் அவர்கள் ( நீங்கள்) ஏற்றுக்கொள்கிறீர்கள் நாட்டில் ஒற்றுமையோ, சமாதானமோ இல்லையென்று?
பதில்: ஒற்றுமை ஏற்படுவதற்கு தேவையான சூழல் , பின்புலத்தை உருவாக்குதல் , சமூக நிபந்தனைகள், அரசியல் பின்னணி எமக்கு இல்லை என்ற பிரச்சினையொன்று உள்ளது. தமில் இனத்திற்கு உணர்வொன்று ஏற்பட வேண்டும்  தாங்கள் அடிமைப்பட்ட சமூகம் அல்லவென்று. அதே போன்று அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில்  அவர்களது வேலைகளை செய்துகொள்ளும்  சுதந்திரமான அதிகாரம் உண்டு என்ற உணர்வையும் நாம் அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.  அவ்வாறு அதிகாரம் இல்லாதவரை  எம்மால் அவர்களது மனதில் சகோதரத்துவத்தின் செய்தியை கொடுக்க முடியாது. சிங்கள் மொழியை கற்க அவர்கள் ஆர்வமுறுவார்கள்.  தமிழ் மொழியை கற்கவும் நாம் ஆர்வப்பட வேண்டும்.
கேள்வி: மொழியை படித்த மாத்திரத்தில் சகோதரத்துவத்துவம் ஏற்பட்டுவிடும் என்று சொல்ல முடியுமா என்ன?
பதில்: ஆம் நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன். இன்று அவ்வாறு கற்பது அவர்களது வாழ்க்கையில் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொள்ளவே ஒழிய  சகோதரத்துவத்தின் பாலமாக அல்ல.  நான் அதனை ஏற்றுக்கொள்கிறேன்.
கேள்வி: அப்படியென்டால் நீங்கள் பாத யாத்திரையை ஏற்பாடு செய்தது நிர்வகிப்போருக்கு தெளிவூட்டவா? பொது மக்களுக்கு தெளிவூட்டவா?
பதில்: இரு சாராருக்கும் தெளிவூட்டத்தான் இதனை செய்தோம்.
கேள்வி: ஆனால் பொலீசார் அதற்கு குறுக்கீடு செய்தனர் அல்லவா?
பதில்: ஆம். பொலிசார் எங்களுக்கு சொன்னார்கள் இந்த பாத யாத்திரை சென்றால் குழப்பங்கள் ஏற்படலாம் என்று. எங்களுக்கு எதிராக நகரத்தின் மத்தியில் கும்பலொன்று  செயல்பட இடமுண்டு.  அப்படி நடந்தால் அமைதி சீர்குலைந்து ஏதாகினுமொரு தொல்லைகள் ஏற்படலாம் என்று பயமாக உள்ளது.அதனால் போக வேண்டாம் என்றார்கள்.
அப்போது நான் அவர்களிடம்  கேட்டேன் அமைதிக்கு பங்கம் வருமாப்போல் செயல்பட்டால் அவர்களை கைது செய்தல் பொலீசாரின் வேலைதானே என்று. அப்போது பொலீசார் சொன்னார்கள் தெரியாதா இந்த நபர்களுக்கிடையில் பைத்தியக்காரர்களும் இருக்கிறார்களே என்று. அப்ப நான் கேட்டேன்  இப்ப இருப்பது பைத்தியக் காரர்களின் சமூகமா என்று. மற்றது ச்மாதானமான பொதுமக்களை துன்புறுத்த அல்ல பொலிஸ் இருப்பது பொது மக்களுக்கு சட்டத்தை நிறைவேற்றத்தான் பொலிஸார் இருக்கின்றனர் என்று.
கேள்வி:  நீங்கள் அரசாங்கத்தின் ஓர் அமைச்சர். உங்களுக்கும் சமாதான பாத யாத்திரை போக இடமில்லையே ? இனி மற்றவரப்பற்றி என்ன கதைக்க இருக்கு?
பதில்: பாறாளுமன்றத்திலோ, அரசாங்கத்திலோ  இன ஒற்றுமையையோ, சமாதான பாத யாத்திரையையோ நிராகரிப்பவர்கள் யாரும் இல்லை. அதி பெரும்பான்மையினர் இதற்கு விருப்பம். மிகக்கொஞ்சம் பேர்தான் விரும்ப்பமில்லை. எங்களுக்கு  இந்த நிலையைத்தான் மாற்ற முடியாமல் இருக்கு.
கேள்வி: நீங்கள் இப்படி சொன்னாலும்  இலங்கையின் ஆட்சியும், அரசாங்கமும் ஒன்றுதானே?
பதில்: ஆம் நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசின் கொள்கையை எடுத்துப் பார்த்தோமென்றால்  இறுதி விளக்கம் அரசாங்கத்தின் கொள்கையேதான்.  நாங்கள் அதனை மாற்றவே முயற்சிக்கிறோம்.
கேள்வி:  அமைச்சர் அவர்களே என்னவாக இருந்தாலும் இந்த அரசாங்கத்திலேயே ஒட்டிக்கொண்டிருக்க  நீங்கள் கொண்டு வருகின்ற வாதம்தானே இது.?
பதில்: நான் விலகினேன் என்று பிரச்சினைகள் முடியுமாக இருந்தால் நான் விலக தயார். அதனால் வெளியேறுவதல்ல தீர்வு. விலகுவதால் பலனேதும் இல்லை. அதை விடவும் ஏதாகினுமொரு உபாயமூல தீர்வொன்றினை எடுக்க இயலுமாக இருக்க வேண்டும். அதற்காக நாங்கள் உபாயசாலிகளாகிறோம்.
தமிழில்: எம். எல். ஹாஜா சஹாப்தீன்

Post a Comment

0 Comments