Subscribe Us

''சட்டத்துக்கு முரணான வகையில் ஜனாதிபதி தேர்தல்" ராவய பிரதான தலைப்புச்செய்தி


 ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராக எதிர்கட்சிகளுக்கு போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதை தவிர்த்து பாப்பாண்டவரின் இலங்கை விஜயத்திற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடாத்தி முடிக்க அரசாங்கத்திற்கு தேவை உள்ளதெனவும், அதற்காக 1988 இலக்கம் 30 ஐக் கொண்ட சட்ட மூலத்தின் மூலம் திருத்தியமைக்கப்பட்ட 1981 இலக்கம் 15 ஐக் கொண்ட ஜனாதிபதி தேர்தல் சட்ட மூலத்தின் வரும் ஏற்பாடுகளுக்கு முரணாக நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் ஆணையொன்றின் மூலம் தேர்தலை நடாத்த அரசாங்கத்தில் உயர் மட்டத்தில் இருக்கும் சில அதிகாரம் மிக்கவர்கள் இரகசியமாக தீர்மாணித்துள்ளர்கள். இது மிகவும் நம்பிக்கைக்குரிய தரப்பினரால் ராவயவுக்கு அறியக்கிடைத்துள்ளதாக அந்த செய்தி தொடர்கிறது. (அதில் பாப்பாண்டவர் வடக்கிற்கு செல்ல உள்ளதால் அவர் வடக்கில் போய் என்ன சொல்வாரோ என்ற அச்சம் நிலவுவதால் ஜனவரி 13 ஆம் தேதிக்கு முன்னர் தேர்தல் நடக்கலாம்.என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)

தமிழில்: எம். எல். ஹாஜா சஹாப்தீன்
நன்றி: ராவய

Post a Comment

0 Comments