There was no such thing as Palastinians. It was not as though there was a Palastine people and we came and threw them out and took their country from them. They did not exist.
- Golda Meir –
(Prime Minister 1969-197)
1969 ஜூன் 15 இல் பிரிட்டனில் வெளியாகிய சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இஸ்ரேலின் முன்னாள் பெண் பிரதமர் கோல்டா மேயர் தெரிவித்த கருத்து இது. பலஸ்தீனர்களைத் துடைத்தழிக்க வேண்டும் என்ற சியோனிஸத்தின் காட்டுமிராண்டிச் சிந்தனையே இது.
“பலஸ்தீனர் எனச் சொல்லப்படும் ஒன்று அங்கு இல்லை. நாம் வந்தவுடன் அவர்களை அங்கிருந்து வீசிவிட்டோம். பலஸ்தீனர்கள் என்போர் இப்போது அங்கு இல்லை” என்ற மிகப் பெரும் பொய்யின் மீதே இஸ்ரேல் கட்டமைக்கப்பட்டது.
சியோனிஸ்டுகளைப் பொறுத்தவரை பலஸ்தீனர்களை அவர்கள் இன்னும் மனிதர்களாகவே கருதவில்லை. துடைத்தழிக்கப்பட வேண்டிய கச்சாப் பொருட்களாகவே கருதுகின்றனர் என்பதற்கு மேயரின் இந்தக் கூற்று தெளிவான சான்று.
சமீபத்திய காஸா மீதான இஸ்ரேலின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் கொல்லப்பட்ட குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் குறித்தும் இன்றைய நெடன் யாஹுவும் அவனைச் சூழவுள்ள ஆக்கிரமிப்புப் படையும் இதே மனோநிலையையே கொண்டுள்ளனர்.
சுமார் 2000 பேர் வயது வேறு பாடின்றி கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். 6000 இற்கும் அதிகமானோர் காயப்படுத்தப்பட்டனர். 3 இலட்சம் காஸா மக்கள் அகதி முகாம்களில் சிக்கியுள்ளனர். 3 இலட்சம் குழந்தைகள் இன்னும் வாழ்வோடும் மரணத் தோடும் போராடி வருகின்றனர். 10,000 வீடுகள் செல் வீச்சுகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 160 பள்ளிவாயல்கள் அழிக்கப் பட்டுள்ளன.
இப்படி இஸ்ரேலின் இரத்தக் கறைபடிந்த கரங்கள் மீளவும் காஸாவை குதறியுள்ளன. இன்னும் அதன் இரத்த வெறி ஓயவில்லை. தற்காலிகமாக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தாலும் இஸ்ரேல் அதனை எந்த வேளையிலும் மீறலாம்.
360 சதுர கி.மீ. பரப்பைக் கொண்ட ஒரு சிறிய பள்ளத்தாக்கின் மீது கடல், வான், நில வழியாகத் தாக்குதல் நடத்துவதற்கு 8600 இராணுவச் சிப்பாய்களை இஸ்ரேல் களமிறக்கியது. அதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்டு சில அறபு நாடுகளும் ஆதரவளித்தன. எவ்வாறாயினும், இஸ்ரேல் தனது படைகளை காஸாவிலிருந்து பின்வாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத் திற்குள் தள்ளப்பட்டுள்ளது.
காஸா ஹமாஸின் நிர்வாகத்தின் கீழ் வந்ததன் பின்னர் இது இஸ்ரேல் மேற்கொண்ட இரண்டாவது திட்டமிட்ட தாக்குதலாகும். இம்முறையோடு ஹமாஸின் கதையை முற்றாக முடித்து விடவே இஸ்ரேல் முனைப்புடன் களமிறங்கியது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதல் குறித்து ஏற்கனவே சில அறபு நாடுகளும் அமெரிக்காவும் நன்கு அறிந்திருந்தன. அதனால்தான் அதற்குப் பகிரங்கமாக ஆதரவளித்தன.
இஸ்ரேல் எதிர்பார்த்தது போன்று இந்தப் போரில் அது வெற்றி பெறவில்லை. இஸ்ரேலின் இராணுவத் துறை ஆய்வாளர் ஒருவர், “இந்தச் சுற்றில் வெற்றியடைந்தது ஹமாஸ் இயக்கமே. இஸ்ரேல் இராணுவம் தோல்வி கண்டுள்ளது” என எழுதுகின்றார்.
இஸ்ரேலின் உல்லாசத் துறை அமைச்சர் உசி, அந்நாட்டின் பிரபல பத்திரிகையான அஹரநோத்திற்கு வழங்கியுள்ள செவ்வியில், “இஸ்ரேலின் படைப்பலம் பிரமாண்டமானதாக இருந்த போதிலும், தந்திரோபாய ரீதியில் இஸ்ரேல் தனது இலக்கை அடையவில்லை. ஹமாஸுக்கு எதிரான அதன் தாக்குதல்களின் நோக்கத்தை இஸ்ரேலியப் படை நிறைவேற்றவில்லை” என ஏற்றுக் கொண்டுள்ளார்.
ராஜதந்திர ரீதியிலும் இஸ்ரேல் பாரியளவில் பின்னடைந்துள்ளது. அறபு நாடுகள் இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கியபோதும், தென்னாபிரிக்கா உள்ளிட்டு பல லத்தீன் அமெரிக்க நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை முற்றாகத் துண்டித்துள்ளன. பிரேஸில், பொலீவியா, ஆஜன்டீனா, வெனிசுவேலா, உருகுவே, பராகுவே ஆகிய நாடுகள் இஸ்ரேலிய உற்பத்திகளை முற்றாகப் பகிஷ் கரித்துள்ளதோடு, ராஜதந்திர உறவையும் துண்டித்துள்ளன.
உண்மையில் 1950 பலஸ்தீனர்கள் மிகக் குரூரமாகக் கொல்லப்பட்டமையும் கோடிப் பெறுமதியான கட்டடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டமையும் இஸ்ரேலுக்குக் கிடைத்த வெற்றி எனக் கொள்ள முடியாது. பலஸ்தீன்- இஸ்ரேல் போராட்ட வரலாற்றில் ஹமாஸ் முதல் முறையாக Droneகளைப் பயன்படுத்தியுள்ளமை ஒரு முக்கிய திருப்பமாகும். எந்த அறபு நாட்டிடமும் இல்லாத இத்தொழில்நுட்பத்தை ஹமாஸ் கையாண்டுள்ளமை சியோனிஸத்திற்கு குலை நடுக்கத்தை உருவாக்கியுள்ளது.
தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் போராளிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பமானவை. ஆனால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் குறைந்த பட்சம் 500 பேராயினும் ஹமாஸின் பதில் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். மட்டுமன்றி, இஸ்ரேல் தரப்புக்கு ஆதரவாக நின்ற 300 இற்கும் மேற்பட்ட அமெரிக்க, பிரிட்டன் படைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கு பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் குறிப்பிடத்தக்கது. ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதலால் முதன் முறையாக இஸ்ரேலின் பென் கூரியன் சர்வதேச விமான நிலையம் பலமுறை மூடப்பட்டது. இஸ்ரேலுக்கான வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி கண்டது. இஸ்ரேலின் ஏற்றுமதிப் பொருளாதாரம் தற்காலிகமாக ஸ்தம்பித்தது.
போரில் 500 வீரர்களை இழந்தமை பாரிய இராணுவப் பின்னடைவாகும். மட்டுமன்றி, 2000 மில்லியன் டொலர்களை இஸ்ரேல் போர்ச் செலவாக அறிவித்துள்ளது. இது தவிரவும் மானசீக ரீதியாக இஸ்ரேலியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 250 இற்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரேலிய வைத்தியசாலைகளில் உளநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதை இஸ்ரேலின் சுகாதாரத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளது.
உலகில் அதிக மரண பயம் கொண்டவர்கள் யூதர்களே. ஹமாஸின் இராணுவப் பலம் இஸ்ரேலோடு ஒப்பிடும்போது குறைவாக இருப்பினும், ஹமாஸின் தாக்குதல்கள் இஸ்ரேலியர்களிடையே உருவாக்கும் மனப் பீதியும் மரண பயமும் பயங்கரமானது என்பதை இம்முறை அவர்கள் வெகுவாக உணர்ந்துள்ளனர். அடுத்த தேர்தலை இலக்கு வைத்தே நெடன் யாஹு அரசாங்கம் இத்தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேலின் சிவில் சமூகத்தில் கணிசமானோர் நெடன் யாஹுவை குற்றம் சாட்டுகின்றனர்.
காஸா மீதான இஸ்ரேலியப் போர் யூதர்களின் நிம்மதியை குலைத்து விட்டது. இது எதிர்பார்க்கப்பட்டதே. மொத்தத்தில் காஸா மீதான இஸ்ரேலின் இராணுவப் பயங்கரம் ஈற்றில் தோல்வி கண்டுள்ளது. ஹமாஸின் மனோவலிமையும் பொறுமையும் ஆழ்ந்த இறை நம்பிக்கையும் அவர்களுக்கு இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பாரிய வெற்றியை ஈட்டித் தந்துள்ளது.
எந்த அறபு நாட்டினதும் ஆதரவில்லாமல் இவ்வளவு தூரம் அவர்களால் தனது இராணுவப் பயணத்தை முன்னெடுக்க முடியுமென்றால் அவர்களது மனேவலிமையை என்ன வென்று சொல்வது?
காஸா மீதான போரின் இன்னொரு விளைவு, அது அறபு நாட்டுத் தலைவர்களின் வஞ்சகத்தையும் நரித் தனத்தையும் தோலுரித்து விட்டது. அல்லாஹ்வின் எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு காஸா மக்கள் மீதான யூதர்களின் படுகொலைகளை நியாயப்படுத்தும் நிலைக்கு ஆட்சியாளர்கள் வந்து சேர்ந்துள்ளனர்.
ஆட்சியாளர்களுக்கு அப்பால் ஆலிம்களும், தமது அரண்மனை விசுவாசத்தை வெளிப்படுத்தியிருப்பதுதான் ஆச்சரியமானது. காஸா இனப்படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதோ போராட்டங்களை நடத்துவதோ ஹராமானது என சவூதி அறேபியாவின் தலைமை முப்தி அப்துல் அஸீஸ் அஷ்ஷெய்க் தீர்ப்பளித் துள்ளமையை கவலையோடு நினைவுகூர வேண்டியுள்ளது.
காஸா மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த தாக்குதலின் செலவீனங்களையும் தாம் ஏற்பதாகவும் ஹமாஸை முற்றாக அழிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அறபு எமிரேட்ஸ் கூறியுள்ளது. எகிப்து, சவூதி அறேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலுக்குச் சார்பான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. கட்டார், துருக்கி, தூனிசியா ஆகிய நாடுகள் மாத்திரமே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின.
எவ்வாறாயினும், காஸா மீதான போரில் இஸ்ரேல் பாரிய தோல்வி கண்டுள்ளது. எதிர்கால த்தில் காஸாவைப் பலவீனப்படுத்துவதற்கான மறைமுகமான திட்டங்களை இஸ்ரேல் வகுத்துச் செயல்படும் என சில ஊடக ரகசியங்கள் கசிந்துள்ளன.
ஆயினும், காஸா என்பது இஸ்ரேல் நினைப்பது போன்று வெறும் கட்டடங்களோ மனிதர்களோ அல்ல. காஸா ஒரு சிந்தனை. அதன் போராட்டத்திற்குப் பின்னால் ஒரு பெரிய கொள்கை இருக்கின்றது. அதனை கற்பாறைகளை விட கடின சித்தம் கொண்ட யூதர்களால் அழிக்க முடியாது.
இம்முறை பெரிய சாத்தான் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கியது. வருடாந்தம் வழங்கும் 3 பில்லியன் உதவித் தொகைக்கு மேலதிகமாக 576 மில்லியன் டொலர்களை பலஸ்தீனர்களைக் கொல்வதற்கென்றே ஒதுக்கியது அமெரிக்கா.
அமெரிக்கா எனும் பெரிய சாத்தானும் மத்திய கிழக்கிலுள்ள குட்டிச் சாத்தான்களும் இணைந்துதான் காஸா மீதான போரை தொடங்கியுள்ளன. ஆனால், இறுதியில் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள்.
By: As Sheikh Rauf zain
By: As Sheikh Rauf zain


0 Comments