
மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்தவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மோசடி மற்றும் வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறையிடவுள்ளதாக பொதுபல சேனா எச்சரித்துள்ளது.
கொழும்பில் 05-08-2014 இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு
உரையாற்றிய பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இந்த
எச்சரிக்கையை விடுத்தார்.
பேருவளையில் உள்ள நகரசபை உறுப்பினர் ஒருவர் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின்
அனுசரணையுடன் போதைவஸ்து வர்த்தகத்தில் ஈடுபடுவதாக ஞானசார தேரர்
குற்றம்சுமத்தியுள்ளார்.
குறித்த நகர சபை உறுப்பினரின் வாகனமும், அமைச்சரின் வாகனத் தொடரணியுடன் செல்வதனால் போதைப்பொருட்களை கைப்பற்ற முடியாத நிலை உள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் ஒருவர் கடல் அட்டைகளை சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றார்.
அவருடனேயே, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொள்வதாக கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இதுதவிர, அமைச்சர் ராஜித்த என்பவர், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை
பேணி வந்தவர் என்பதை தெளிவாக கூற முடியும் எனவும் தேரர் குறிப்பிட்டார்.
0 Comments