இஸ்ரேல்-காஸாவின் ஹமாஸ் போராளிகள் இடையே கடந்த 29 நாட்களாக சண்டை நடைபெற்று
வருகிறது. மனித நேய அடிப்படையில் 3 நாள் போர் நிறுத்தம் செய்ய
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த போர் நிறுத்தத்தால் காசா
நகரம் முழுவதும் நிசப்தம் நிலவுகிறது. இந்த போர் நிறுத்தத்தால்
கோடிக்கணக்கான மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். போர் நிறுத்தம் தொடங்கிய நேரம்
முதல் எந்த வித அத்துமீறலும் இதுவரை நடைபெறவில்லை. ஆனால் இனி வரும் நீண்ட
நேரத்திற்கும் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவேண்டும் என
இஸ்ரேலை தாய்நாடாக கொண்டு காசா எல்லையிலுள்ள கிப்பட்ஸ் பகுதியில் வாழும்
ஓர்லி டோரன் தெரிவித்தார்.
இதற்கு முன் மூன்று அல்லது நான்கு முறை போர் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் அவையனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படவில்லை என்று அவர்
வருத்தத்துடன் தெரிவித்தார்.
0 Comments