Subscribe Us

header ads

சாஹிராவில் சிரமதானம்


- முதல் முயற்சி முழுமை பெற வேண்டும் –
(TPT Media)

நீண்ட (நோன்பு கால) பாடசாலை விடுமுறையின் பின் ஆரம்பிக்கப்படும் முதல் நாள் வகுப்புப் பாடங்களை நடத்துவதுடன் இணைந்ததாக புத்தளம் ஜம்இய்யதுல் உலமா சபையும் புத்தளம் பெரியபள்ளிவாசலும் முன்வைத்த சிந்தனையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலையை சுத்தம்செய்யும் சிரமதானம் சாஹிரா தேசிய கல்லூரியில் இன்று (2014.08.02) காலை 8.30 மணியிலிருந்து நடைபெற்றது.

இன்றைய சிரமதானம் தொடர்பாக அ.இ.ஜ.உ. புத்தளம் கிளை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம் கூறும்போது, “புத்தளம் ஜம்இய்யதுல் உலமா சபையினால் ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய சமூக ஊடகங்கள், பள்ளிவாசல்கள், பெருநாள் கொத்பாவின் பின் அறிவித்தல், வெள்ளிக்கிழமை ஜும்மாவின் பின்னரான அறிவித்தல் ஆகியன மூலம் இன்றைய சிரமதானம் குறித்தி வலியுறுத்தப்பட்டது. கல்விப் பணிமனையின் (தமிழ் பிரிவு) வழங்கிய ஒத்துழைப்பும் குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையில் புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளில் சிரமதானப் பணி நடைபெறுவதாக அறிகின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.

இச் சிரமதானத்தில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர், பழைய மாணவர்கள், பிரமுகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர். ஆயினும் எதிர்வரும் காலங்களில் இப்படியான சிரமதானங்களுக்கு இதனை விட அதிகமானோர் தம்மை ஈடுபடுத்தினால், இவ் வேலைத்திட்டம் இதைவிட பெரு வெற்றிகரமாக நிறைவடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” எனக் கூறினார்.

மேலும், இன்றைய சிரமதானப் பணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஜம்இய்யதுல் உலமா புத்தளம் கிளையும் புத்தளம் பெரியபள்ளிவாசலும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறானதொரு சிரமதானம் முதன் முறையாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படுள்ளது. கைவசமுள்ள அனைத்து ஊடகங்ளையும் பயன்படுத்தி அறிவுறுத்தப்பட்டது. எனினும் சமூகத்தின் கரிசனை போதியளவு காணப்படாமை கவலைக்குரியது. கல்விசார் நடவடிக்கைகளில் அதீத அக்கறையுடனும் அர்ப்பணத்துடனும் சிந்திக்க வேண்டிய காலப்பகுதியில் எமது மந்தவேகமும் சோம்பலும் எதிர்கால சந்ததியின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என்பதை இவ்விடம் வலியுறுத்த வேண்டியுள்ளது.

தொகுப்பும் படங்களும்: ஹிஷாம் ஹுஸைன்
* மு.ப. 8.30 மணி முதல் 11.00 வரையிலான நேரத்தில் எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் இக் குறிப்புடன் காட்சிப்படுத்தப்படுகின்றது. இதன் பின்னரும் பலர் கலந்துகொண்டுள்ளுனர்.

நன்றி: The Puttalam Times





















Post a Comment

0 Comments