இன்று வெளியான ஆங்கில ஊடகமொன்று அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறும் என
எதிர்ப்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பிரதான முஸ்லிம் கட்சியான
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே ஆதரவளிக்கும்
என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உறுதிமொழி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான
ரவூப் ஹக்கீமினால் வழங்கப்பட்டுள்ளது எனவும் அச்செய்தி மேலும்
தெரிவிக்கின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்’விற்கும் அமைச்சர் ஹக்கீமிற்கும் இடையிலான
முக்கிய சந்திப்பொன்று நோன்புப் பெருநாள் தினத்தன்று சிரேஷ்ட அமைச்சர்
ஏ.எச்.எம்.பௌசியின் இல்லத்தில் இடம்பெற்ற போதே ஜனாதிபதி தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கும்
என்ற உறுதிமொழி அமைச்சர் ஹக்கீமினால் வழங்கப்பட்டதென தெரிய வருகிறது.
-al mashoora-


0 Comments