Subscribe Us

header ads

மஹேலவை கட்டுப்படுத்த வேண்டும்: மிஸ்பா

இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேல ஜெயவர்தெனவின் துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினாலேயே இலங்கை அணியை வெற்றி பெற முடியும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். 
 
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த வேளையில் பாகிஸ்தான் கராச்சியில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். நாங்கள் இலங்கையில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அவர்களின் துடுப்பாட்ட வீரர்களை முழுமையாக கட்டுபாட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். அதில் முக்கியமானவர் மஹேல ஜெயவர்தென. அவர் மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர் கிரிக்கெட்டில் நல்ல சாதனைகளை செய்துள்ள ஒருவர். 
 
ஆனால் நாங்கள் அங்கே வெல்வதற்காக செல்கின்றோம். அவர்களின் சிரேஷ்ட வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை தடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். இந்த தொடர் இலகுவாக எங்களுக்கு அமையாது. சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments