Subscribe Us

header ads

எனக்கு காது கேட்பத்தில் சிறிது குறைப்பாடு இருந்தாலும், முற்றாக காது செவிடாகவில்லை - பிரதமர் ஜயரத்ன

 
எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் பிரதமர் பதவியையும், புத்தசாசன அமைச்சர் பதவியையும் கைவிட்டுச் செல்ல தான் தயாராக இருப்பதாக பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், கடந்த காலங்களில் தன்னை பற்றி வெளியாகிய செய்திகள் சம்பந்தமாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடம்பில் கொடி ஒன்றை போர்த்தி கொள்வது போலவே நான் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டேன். எந்த சந்தர்ப்பத்திலும் பிரதமர் பதவியையும், புத்தசாசன அமைச்சர் பதவியையும் விட்டுச் செல்ல தயாராகவே இருக்கின்றேன். பிரதமர் பதவிக்கோ,  புத்தசாசன அமைச்சர் பதவிக்கோ வேறு ஒருவரை நியமிப்பது குறித்து என்னிடம் எந்த எதிர்ப்புமில்லை.
எனக்கு காது கேட்பத்தில் சிறிது குறைப்பாடு இருந்தாலும் முற்றாக காது செவிடாகவில்லை. எனக்கு பார்வை நான்றாக தெரிவதுடன் எந்த வேலையாக இருந்தாலும் அதனை தனியே செய்து கொள்ளும் இயலுமையும் என்னிடம் இருக்கின்றது. என் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் கொண்டுள்ள சிலர், எனது குறைபாடுகள் பற்றி பேசுகின்றனர்.
ஒரு காலத்தில் அமெரிக்காவின் பிரதமர் ஒருவர் சக்கர நாற்காலில் நாடாளுமன்றத்திற்கு சென்றதாகவும் அது குறித்து அந்நாட்டில் எந்த ஊடகமும் செய்திகளை வெளியிடவில்லை எனவும் பிரதமர் டி.எம். ஜயரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments