மனிதன் வாழும்
காலமெல்லாம் மாற்றத்தை விரும்புகிறான். எனவேதான்
மனிதன் அடிக்கடி இந்த மாற்றத்தைப் பற்றிப்பேசுகிறான்.
இன்றைய காலத்தில் சர்வதேச சமூகத்திலும்
சரி தேசிய சமூகத்திலும் சரி விரும்பிப் பேசப்படும் ஒரு தலைப்புத்தான் மாற்றம்.
மாற்றம் எனும் மந்திரம் தேசிய மட்டத்தோடு நின்று விடாமல் உள்ளூர் சமூகத்திலும் ஒரு
தேவையை உணர்த்தி நிற்கிறது.
மாற்றம் எனும் விடயத்தை எத்தனை சமூகம்
பேசினாலும், எத்தனை மொழிகளில் பேசினாலும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த தனி மனித
மற்றம் தேவை என்பதை உணரும் வரை அனைத்து சமூகமும் இந்த மாற்றம் எனும் வார்த்தையை
உலகம் அழியும் வரை மந்திரம் போல் வாய்க்குள் முனு முனுகத்தான்
செய்யும்.
இந்த அடிப்படையில்
ஆள்,காலம்,இடம் ஆகியவற்றை முழுமையாக அறிந்து எடுக்கப்படுகின்ற தனி மனித மாற்றம்
தான் நிரந்தர மாற்றமாக இருக்க முடியும், இருக்க வேண்டும்.
ஆள்,காலம்,இடம்
ஆகியவற்றை
அறியும் ஆற்றலும் அறிவும் மனிதனை விட
மனிதனையும், காலத்தையும், இடத்தையும் படைத்த
இறைவனுக்கே அதிகம் உண்டு. எனவே மனிதன்
விரும்பும் மாற்றத்தை இறைவன் தந்த வாழ்க்கை முறையாக மாற்றுவதே சிறந்தது. மனிதன்
பேசுகின்ற மாற்றத்தை இறைவன் தனது திருமறையில் பேசும் வாழ்க்கை முறையாக மாற்றுவதே
சிறந்தது. இந்த மாற்றமே அனைத்து தேடல்களுக்கும் ஒரு விடையாக அமையும் என்பதில்
எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
படைத்தவன் காண்பித்த முழுமையான வாழ்வை
நோக்கி ஒவ்வொருவரும் நகர்ந்து வந்தால் முதலில் எங்கள் வீடு மாறும், எங்களை
தொடர்ந்து எங்கள் கிராமம் மாறும் எங்கள் கிராமங்களின் உண்மையான மாற்றம் முழு
நகரத்தையும் மாற்றும். எங்கள் நகரின் மாற்றம் கண்டு பல நகரங்கள் மாற்றம் பெறும்
இதன் உண்மை மாற்றம் முழு நாட்டையும் மாற்றும் உந்து சக்தியாகத் திகழும் என்பதில்
ஐயமில்லை.
Samsham Shafeek - Kalpitiya
0 Comments