Subscribe Us

header ads

இஸ்ரேலுக்கு எதிராக போராடும் அத்தியாயம் தொடரும் - அல் கஸ்ஸாம் உறுதி

 
பலஸ்தீனர்களின் உரிமை மற்றும் அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும்வரை இஸ்ரேலுக்கு எதிராக போராடும் அத்தியாயம் தொடரும் என்று ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவான இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் படையணி உறுதியளித்துள்ளது. 
அல் கஸ்ஸாம் படையணி தனது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பலஸ்தீனர்களின் தற்போதைய நிலை ஒரு மாற்றத்திற்கான சூழல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "எதிரியின் (இஸ்ரேல்) நடவடிக்கை போர்ப் பாதையிலும் அதன் முடிவிலும் தீர்மானிக்கப்படும். அடுத்த ஒருசில தினங்களில் எமது மக்களின் இலக்கு எட்டப்படும் என்று நம்புகிறோம். எமது மக்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்" என்றும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
"எமது முஜhஸிதீன்கள் (போராளிகள்) தொடர்ந்தும் உ'hர் நிலையி லேயே உள்ளனர். எமது மக்களின் தேவைக்காக பலஸ்தீன எதிர்ப்புப் போராட்ட தலைமை எடுக்கும் முடிவை நிறைவேற்ற அவர்கள் தயாராகவே உள்ளனர்" என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. பலஸ்தீன மத்தியஸ்தத்தில் காசாவில் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு அங்கிருந்து இஸ்ரேல் துருப்புகள் வாபஸ் பெறப்பட்ட நிலையிலேயே கஸ்ஸாம் படையணி இந்த அறிவிப்பை விடுத்திருந்தது. 

Post a Comment

0 Comments