காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா
பள்ளிவாயல்களில் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள்
புலிகளினால் கொடூரமாக கொள்ளப்பட்டு இன்றுடன் 24 ஆண்டுகள்
பூர்த்தியாகின்றது.
இதனை முன்னிட்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவுதினமாக இன்று
ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹூஸைனியா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் கத்தமுல்
குர்ஆன் வைபவமும் விஷேட மார்க்க சொற்பொழிவும்,துஆ பிரார்த்தனையும்
இடம்பெற்றது.
விஷேட மார்க்க சொற்பொழிவை மௌலவி எம்.ஐ.எம்.முஸ்தகீம் (பலாஹி)
நிகழ்த்தினார். அதேவேளை விஷேட துஆ பிரார்த்தனையை மௌலவி எம்.எச்.மன்சூர்
(பலாஹி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி ஹூஸைனியா பள்ளிவாயலில் தலைவர்,செயலாளர்
,பொருளாளர் உட்பட அதன் நிர்வாகிகள் ,சுஹதாக்களின் குடும்பத்தினர்கள் என
பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிகள் செறிந்து வாழும் காத்தான்குடி
பிரதேசத்தில் அமைந்துள்ள காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல்
மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை
இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் புலிகளினால்
கொடூரமாக கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது
- பழுலுல்லாஹ் பர்ஹான் -


0 Comments