Subscribe Us

header ads

இறுதிக் கிரியையின் போது மீண்டும் உயிர்ப்பெற்ற குழந்தை (VIDEO)

வைத்திய அறிக்கை மூலம் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட 3 வயது குழந்தை ஒன்று இறுதிக் கிரியைகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் உயிர்ப்பெற்ற சம்பவம் பிலிபைன்ஸில் இடம்பெற்றுள்ளது.

பிலிபைன்ஸ், ஒரோரா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல நாட்களாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதனை வைத்தியசாலையின் அறிக்கையும் உறுதிப்படுத்தியது.

இந்நிலையில் இறுதிக் கிரியை நிகழ்வில், குழந்தையின் பூதவுடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை திறந்தபோது குழந்தையின் தலை அசைவதை காணக்கூடியதாக இருந்தது.

எனினும் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை அடுத்து சில நிமிடங்களில் குழந்தை மீண்டும் உயிரிழந்துள்ளது.



நன்றி: நியூஸ்1st

Post a Comment

0 Comments