Subscribe Us

header ads

எல்லா யூதர்களும் இஸ்ரேலை சார்ந்தவர்கள் அல்லர். இஸ்ரேல் என்ற நாட்டை நாம் அங்கீகரிப்பதும் இல்லை ( படம், வீடியோ)

"சியோனிஸ்டுக்கள் தமது தூய மதத்தை சியோனிசத்தாலும் இஸ்ரேல் என்ற சட்டபூர்வமற்ற நாட்டினாலும் மாசுர செய்கிறார்கள்"
இஸ்ரேலை கண்டித்து உலகளாவிய எதிர்ப்பலைகள் வளர்ந்தவண்ணம் உள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் இஸ்ரேல் பற்றிய அதிருப்தியையே வெளிப்படுத்தி வருகின்றனர். காஸா மீதான மிருகத்தனமான தாக்குதலும் அங்கு நிகழும் உயிரிழப்புக்களும் உலகின் கவனத்தை ஈர்த்தவண்ணம் உள்ளன.
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் “நெடுரி கர்த்தா” (Neturei Karta) என்பது ஓர் யூத அமைப்பு. இவர்கள் நெடுங் காலமாக யூத சியோனிச சக்திக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள் (அவர்களின் இணய தளம் : http://www.nkusa.org)

இஸ்ரேல் என்றொரு தேசம் இல்லை என்றும் சியோனிஸ்டுக்கள் தமது தூய மதத்தை சியோனிசத்தாலும் இஸ்ரேல் என்ற சட்டபூர்வமற்ற நாட்டினாலும் மாசுர செய்கிறார்கள் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் தாம் பாலஸ்தீனர் பக்கமே இருக்கிறோம் என்றும் ஒன்றிணைந்த பாலஸ்தீனமே எமது அவா என்றும் அவர்கள் கூருகின்றனர். இஸ்ரேலுக்கு எதிரான உலகம் பூராவும் நிகழும் ஆர்பாட்டங்களில் கலந்துகொண்டு தமது இக்கொள்கையை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





நன்றி: அஷ் ஷெய்க் றவூப்செயின்

Post a Comment

0 Comments