டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்
செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித் தொடரில்
சமீபத்தில் முடிந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
இந்த நிலையில் டெஸ்ட்
கேப்டன் பதவியில் இருந்து டோனி விலக வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள்
கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான இயன்சேப்பல் கூறியுள்ளார்.
பெங்களூர் வந்து இருந்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:–
டெஸ்ட்
போட்டியை பொறுத்தவரை நிச்சயமாக டோனி சிறந்த கேப்டன் இல்லை. 20 ஓவர் போட்டி
மற்றும் ஒருநாள் போட்டிக்கு மட்டுமே அவர் சிறந்த கேப்டன்.
இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா பயணத்தில் அனைத்து டெஸ்டிலும் தோற்ற பிறகு அவர் டெஸ்ட்
கேப்டன் பதவியில் நீடித்து இருப்பது ஆச்சரியமே. ஆஸ்திரேலியாவில் இப்படி
நடந்து இருந்தால் கேப்டன் உடனடியாக நீக்கப்பட்டு இருப்பார்.
இந்திய
அணி தலைமைக்கு புதிய ரத்தம் தேவை. டெஸ்ட் கேப்டன் பதவிக்கு வீராட் கோலியே
தற்போது பொருத்தமானவர். அவருக்கு வழிவிடும் வகையில் டோனி டெஸ்ட் கேப்டன்
பதவியில் இருந்து விலக வேண்டும். இந்த விஷயத்தில் இந்திய தேர்வுக்
குழுவினர் கடுமையான முடிவு எடுக்க வேண்டும். கோலிக்கு தற்போது 27 வயது தான்
ஆகிறது. அவரால் 4 அல்லது 5 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட முடியும்.
இவ்வாறு இயன்சேப்பல் கூறியுள்ளார்.


0 Comments