ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழம் எலுமிச்சை. உணவாகவும், மருந்தாகவும்
மட்டுமின்றி மங்கள பொருளாகவும் எலுமிச்சை திகழ்கிறது. உலகம்
முழுவதும் எலுமிச்சையின் மருத்துவ பண்புகளை அறிந்து அதிகளவில்
பயன்படுத்தி வருகின்றனர். சாத்துக்குடி, ஓரஞ்சு, நாரங்காய்
ஆகியவையும் எலுமிச்சை இனத்தை சேர்ந்தவையே. இதன் இலைகளில்
தைலச்சுரப்பிகள் உள்ளன. 3ஆவது ஆண்டில் பலன் தரும் எலுமிச்சை 30 முதல்
50 ஆண்டுகள் வரை மகசூல் தரும். செழிப்பான பூமி என்றால் 100 ஆண்டுகள் வரை
நீடித்து வாழும்.
நல்ல நிலமாக இருந்தால் ஒரு மரம் ஆண்டிற்கு 2ஆயிரம் பழங்கள் வரை
கொடுக்கும். இப்பழம் ஊறுகாயாகவும், களைப்பை உடனடியாக நீக்கி
புத்துணர்ச்சி தரும் பழச்சாறாகவும் பயன்படுகிறது. இதுதவிர
மங்கள பொருளாகவும், திருஷ்டி பரிகாரமாகவும் பயன்படும்
எலுமிச்சையை சிலர் மாந்திரீகத்திற்கும் பயன்படுத்துகின்றனர்.
பெரியவர்களை மரியாதை செய்யவும் இப்பழம் வழங்கப்படுவதுடன்,
தெய்வங்களுக்கு மாலையாகவும் அணிவிக்கப்படுகிறது.
எலுமிச்சை பழத்தின் சத்துக்கள்
விட்டமின் ஏ 7 மில்லிகிராம், விட்டமின் பி.-ஜே 6 மி.கி, விட்டமின் சி
16 மி.கி, சுண்ணாம்பு சத்து 25 மி.கி, இரும்புச்சத்து 1 மி.கி, கலோரி
அளவு 17 ஆகும். இதுதவிர செம்புச் சத்து அதிகம் உள்ளதால் உடலுக்கு பல
நன்மைகளை தருகிறது. எலுமிச்சை சாற்றை பித்தளை பாத்திரத்தின் மீது
தேய்த்தால் அது செம்பு நிறமாக மாறுவதை காணலாம். மேலும் பொஸ்பரஸ் (0.2)
கார்போஹைதரேட் எனப்படும் மாவுச்சத்து (10.9 மி.கி), தாவர
உப்புச்சத்து (0.1), புரதம் (1.5), கொழுப்புச் சத்து (1), தண்ணீர் (84.6)
என்ற அளவில் உள்ளன.
விட்டமின் சி உள்ளதால் அதன் சாற்றை அருந்தும்போது தொற்றுநோய்
அணுகாது. இரத்தத்தில் புதியதாக உயிரணுக்கள் உற்பத்தி
செய்யப்படுவதுடன் தேவைப்படுகிற பிராண சக்தியும் இயற்கையாக
கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் தங்களது களைப்பை உடனடியாக தீர்க்க
எலுமிச்சை சாறு உதவுகிறது.
54 வகையான நோய்கள்
எலுமிச்சை 54 வகையான நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. ஈர்ப்புண்,
நாக்குப்புண், ஈளை, இருமல், சுகபேதியை நிறுத்துதல், வாத நோய், வயிற்று
வலி, கர்ப்பிணிகள் இரத்தபேதி, வயிற்று கடுப்பு, சொரி சிரங்கு,
பித்தவாந்தி, இருபக்க தலைவலி, பேன், பொடுகு, பல்வலி, பித்த மயக்கம்,
காக்கா வலிப்பு, தேள், தேனீ விஷம் நீக்குதல், முகப்பரு, வயிற்று கிருமி,
தொண்டை வலி, தொண்டை வறட்சி, வயிற்று இரைச்சல், வாய்க்கசப்பு,
மலச்சிக்கல், நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் நோய்கள்,
மூட்டுவலி, வெட்டை நோய் என ஒவ்வொரு நோய்களுக்கும் மருந்தாக
பயன்படுகிறது.
விஷக்கதிர் தாக்குதலை தடுக்கும்
எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு தூர எறியும் தோலிலும் அரிய சக்திகள்
உள்ளன. அமெரிக்கர்கள் எலுமிச்சம் பழத்தோலிலிருந்து பயோ பிளோபின்
என்ற மருந்தை தயாரிக்கின்றனர். அணுகுண்டு, ஜலவாயுக் குண்டுகளை
வெடித்து அதிலிருந்து உண்டாகும் விஷக்கதிர் இயக்கத்தை எலிகளின் மீது
தாக்கும்படி செய்து பரிசோதித்ததில் பயோபிளோபின் மருந்தை உட்கொண்ட
எலிகள் கதிரியக்கத்தினால் பாதிக்கப்படவில்லை என்பதை
கண்டறிந்தனர். தற்போது அணுகுண்டு சோதனை நடத்தும் நாடுகள் பயோ பிளோபின்
மருந்தை உட்கொண்டு கதிரியக்கத்திலிருந்து தப்புகின்றனர்.
லெமன் பெக்டின்
அனைத்து பழங்களிலும் பெக்டின் என்ற சத்துப்பொருள் உள்ளன. எலுமிச்சம்
பழத்திலிருந்து பிரிக்கப்படும் லெமன் பெக்டின் நீரிழிவு நோயாளிகள்
உடலில் காயம் ஏற்பட்டால் அதனை சரி செய்ய பயன்படுகிறது.
நீரழிவு நோயாளிகள் காயம் அடைந்தால் அந்த இடத்திலிருந்து அதிகளவு
இரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த வகை இரத்தபோக்கை
நிறுத்த லெமன் பெக்டினை பயன்படுத்துகின்றனர். இது இழந்த
இரத்தத்திற்கு பதில் புதிய இரத்தம் உற்பத்தியாக பயன்படுகிறது.
இப்படியான பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எமது page ஜ like பன்னுங்கள்
✔ Like US: https://www.facebook.com/kalpitiyavoice
✔ Follow Us: https://twitter.com/kalpitiyavoice
✔ Visit Us: http://www.kalpitiyavoice.com/


0 Comments