நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளின் பின்னணியில் வெளிநாடுகளில் உள்ள
விடுதலைப்புலிகளே இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர்
மைத்திரிபால சிறினேச தெரிவித்துள்ளார்.
சர்வதேச விசாரணையின் இறுதியில் நாட்டை பிரிப்பதே அவர்களின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலவக்கயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரபாகரனின் மீது கைவைக்கவில்லை என்றால் சர்வதேச விசாரணை தற்போது இல்லை. இந்த சர்வதேச விசாரணையின் பின்னணியில் இருப்பவர்கள் வெளிநாடுகளின் எஞ்சி உள்ள விடுதலை புலி செயற்பாட்டாளர்களே. இந்த நிலையில், இவ்வாறான விசாரணையின் பின்னர் எந்த நாடும் முழுமையானதாக இல்லை. எல்லா நாடுகளும் பிரிந்தே சென்றன. அதுவே வரலாறு. இதனையே விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டார்.
0 Comments