கால்இறுதி ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தது. நேற்றையை ஆட்டங்களில்
அர்ஜென்டினா 1–0 எனற கோல் கணக்கில் பெல்ஜியத்தையும், நெதர்லாந்து பெனால்டி
ஷூட் அவுட் மூலம் 4–3 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகாவையும் வீழ்த்தி
அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
இந்த இரு அணிகளும் அரைஇறுதியில் சந்திக்கின்றன.
அர்ஜென்டினா– நெதர்லாந்து அணிகள் மோதும் 2–வது அரைஇறுதி ஆட்டம் வருகிற 9–ந்தேதி (புதன் கிழமை) நள்ளிரவு 1.30 மணிக்கு நடக்கிறது.
அர்ஜென்டினா
5–வது முறையாக அரைஇறுதிக்கு நுழைந்து உள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு
முன்னேற்றம் கண்டுள்ளது. 2 முறை சாம்பியனான அந்த அணி கடைசியாக 1990–ம்
ஆண்டு இறுதிப்போட்டி வரை நுழைந்து ஜெர்மனியிடம் தோற்றது.
1998, 2006, 2010 ஆகிய போட்டிகளில் கால்இறுதியில் தோற்று இருந்தது.
நெதர்லாந்து
அணி தொடர்ந்து 2–வது முறையாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. கடந்த முறை
இறுதிப்போட்டி வரை வந்து ஸ்பெயினிடம் தோற்றது. ஒட்டுமொத்தமாக 5–வது தடவையாக
அரைஇறுதிக்கு நுழைந்து உள்ளது. 1998 அரைஇறுதியில் அந்த அணி பிரான்சிடம்
தோற்று இருந்தது. 1974, 1978 ஆகிய போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் தோல்வி
அடைந்தது.
இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. இதில் அர்ஜென்டினா ஒரு தடவையும், நெதர்லாந்து 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் ‘டிரா’ ஆனது.
0 Comments