முஸ்லிம்களின் வியாபாரம் சிங்களவர்களினால் தான் பாதுகாக்கப்படுகின்றது.
76 வீதமான வருமானம் சிங்களவர்களினால் தான் முஸ்லிம்களுக்குக்
கிடைக்கின்றது. இதனைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், இந்த
நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அடிப்படைவாத குழுக்கள் உருவாகாமல்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இது அவர்களது வியாபாரத்தைப் பாதுகாக்க
அவசியமானது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர்
தெரிவித்துள்ளார்.
கடந்த அளுத்கம கூட்டத்தில் பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர்
ஆற்றிய உரையில் ”அபசரணய்” என்ற ஒரு சொல் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து
தற்பொழுது அரசியல் மேடைகளிலும் பேசப்படுகின்றது. அமைச்சர்களிடம் இதற்கு
விளக்கம் கேட்கப்பட்டபோதும் எவருக்கும் அதற்குரிய விளக்கம் தெரியவில்லை.
இன்று வெளியான சிங்கள ஊடகமொன்று தேரருடன் மேற்கொண்டுள்ள நேர்காணலில்
இதற்கான விளக்கத்தை தேரர் அளித்துள்ளார். இந்த நேர்காணலிலேயே ஞானசார தேரர்
இவ்வாறு பதிலளித்துள்ளார்.
முஸ்லிம்களிம் வியாபாரிகள் லாபமடைவது இந்நாட்டிலுள்ள சிங்களவர்களினால்.
எனவே, முஸ்லிம் அடிப்படை வாதிகள் உருவாகாமல் பார்த்துக் கொள்வது முஸ்லிம்
சமூகத்தின் பொறுப்பு. சிங்கள மக்கள் மீதும் பிக்குகள் மீதும் கை வைக்கக்
கூடாது என நான் சொன்னேன்.
அவ்வாறு செய்தால், எம்மிடம் இரண்டு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று, இந்த
நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு காணி விற்பதை நிறுத்துவது. மற்றது அவர்களது
கடையில் சாமான் வாங்குவதைவிட்டும் சிங்களவர்களைத் தடுப்பது. சிங்கள மக்கள்
அளுத்கம, பேருவளை பிரதேசங்களிலுள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதைப்
புறக்கணித்தால், அந்தக் கடைகள் மூடிவேண்டி ஏற்படும். இதனைத்தான் நான்
“அபசரணய்” என்று கூறினேன்.
அன்று அளுத்கம சிங்கள மக்கள் ஆவேஷத்துடன் இருந்தனர். அவர்களது ஆவேஷத்தை
ஆவேஷத்தினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன். இதற்காகவே, நான் அங்கு
இவ்வாறு உரையாற்றினேன். எனது உரையின் போது மக்கள் சப்தம் போட்டனர். கை
தட்டினர். எனது ஆவேஷமான உரையினால் அவர்களது ஆவேஷம் கட்டுப்படுத்தப்பட்டது.
எனது உரை அன்றைய வன்முறைக்கு காரணமாக அமையவில்லையெனவும் கௌரவ ஞானசார தேரர்
கூறியுள்ளார்.
0 Comments