அமைச்சர்கள்,பாராளுமன்றஉறுப்பினர்கள்,முதலமைச்சர்கள்,மாகாண மற்றும்
உள்ளூரட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய
சட்டங்கள் பலவற்றை விதித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருப்பதாகத் தெரிய
வருகின்றது.
வெளிநாட்டுப் பயணங்களின்போது அரச பணத்தை எப்படி முகாமைத்துவம் செய்வது
மற்றும் சரியான முறையில் எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பிலேயும்
புதிய சட்டமொன்றை இவர்களுக்கு எதிராக ஜனாதிபதி
நடைமுறைப்படுத்தியுள்ளதோடு,ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக
வெளியிடப்பட்டிருக்கும் 07 பக்க சுற்றி நிரூபமும் இவர்களிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுச் செயலாளர்கள்,கூட்டுத்தாபனத் தலைவர்களும் இச்சட்டத்தில்
உள்வாங்கப்பட்டிருக்கின்ற நிலையில்,ஜனாதிபதி,பிரதமர் மற்றும் ஆளுநர்களுக்கு
இதில் விலக்களிக்கப்பட்டிருப்பதில் அமைச்சர்கள்
அதிருப்தியுற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


0 Comments