Subscribe Us

header ads

ஹமாஸ் – இஸ்ரேல் குறுகிய நேர மோதல் தவிர்ப்பு

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு தரப்புக்கும் இடையில் குறுகிய ஐந்து மணித்தியால மோதல் தவிர்ப்புக்கு இணங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒன்பது நாட்களாக காசா பகுதியில் இரண்டு தரப்பினரும் தாக்குதல்களை நடத்தி வந்த நிலையில், குறித்த ஐந்து மணித்தியால மோதல் தவிர்ப்புக்கு இணங்கப்பட்டுள்ளது.

இதனை ஹமாஸ் போராளிகளின் தலைவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.

குறித்த கால இடைவெளியில் எந்த தாக்குதலையும் நடத்தப் போவதில்லை என்று இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இஸ்ரேலிய தாக்குதல்களால் 220 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகின்ற போதும், இதுவரையில் இஸ்ரேலில் ஒருவர் மாத்திரமே பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments