காஸா பகுதியில் மீண்டும் கடும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் யுத்த நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள எகிப்து நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு இஸ்ரேல் சம்பதித்திருந்தது.
எனினும், இந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் இயக்கம் நிராகரித்து விட்டது.
இந்த போர் நிறுத்த முயற்சி தோல்வி அடைந்ததற்கு பின்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் 47 ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானதால் மீண்டும் தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸா மீது தாக்குதல் மேற்கொள்வது வேறு வழியின்றிய நிலையிலேயே எனஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து போரிடும் முடிவை கொண்டுள்ள ஹமாஸ் அமைப்புக்கு தகுந்த பதில் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
9வது நாளாக தொடரும் ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான மோதல் காரணமாக 195 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
அத்துடன், பல நூற்றுக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


0 Comments