இலங்கை அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன சர்வதேச டெஸ்ட்
போட்டிகளிலிருந்து விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளார். இது தொடர்பாக மஹேல
ஜயவர்தன அனுப்பிய விலகல் கடிதம் கிரிக்கெட் நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக
அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்துவரும் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளின்
பின்னர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தான் விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி
சில்வாவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிங்கள
ஊடகமொன்று சற்று முன்னர் அறிவித்தது


0 Comments