Subscribe Us

header ads

நாட்டில் முஸ்லிம் சமூ­கத்தை அழிக்க அர­சாங்கம் கையில் எடுத்­துள்ள ஆயு­தமே பொது­ப­ல­சேனா. அப்­பாவி மக்­களை போராட்­டத்­திற்கு தூண்டி மீண்­டு­மொரு முஸ்லிம் சிங்­கள கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்த வேண்டாம் என தெரி­விக்கும் தம்­பர அமி­ல­தேரர் முஸ்­லிம்கள் அச்­ச­ம­டைய வேண்டாம் சிங்­கள மக்கள் முஸ்­லிம்­களை பாது­காப்­பார்கள் எனவும் தெரி­வித்தார்.
ரம­ழானை முன்­னிட்டு அசாத்­சாலி அமைப்­பினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பு புதிய நகர மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்ட போதே தம்­பர அமில தேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
இங்­கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
நாட்டில் மூவின சமூ­கங்­களும் ஒன்­றி­ணைந்து வாழ்ந்­தாலும் ஒவ்­வொரு இனத்­த­வரும் மனதில் பிரி­வி­னை­யு­டனும் விரோ­தத்­து­டனும் பழக வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு அண்­மைய கால சம்­ப­வங்கள் முக்­கிய கார­ண­மாகும். குறிப்­பாகச் சொல்­வ­தாயின் இந்த நாட்டில் இடம்­பெறக் கூடாத யாவரும் விரும்­பத்­த­காத ஒரு சம்­ப­வமே அளுத்­கம பேரு­வளை இனக்­க­ல­வரம். முஸ்லிம் சமூ­கத்தின் மீதான காட்­டு­மி­ராண்டித் தன­மான தாக்­கு­தலை இந்த அர­சாங்கம் மேற்­கொண்டு இன அழிப்­பினை மேற்­கொள்ள முயற்­சித்­துள்­ளது. நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­தினை அழிக்க அர­சாங்கம் கையில் எடுத்­துள்ள ஆயுதம் பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்பு. ஒரு சிலரின் பொய்­யான கருத்­துக்­க­ளையும் தீவி­ர­வாத அமைப்­புக்­களின் பயத்தையும் காட்டி நாட்டில் உள்ள அனைத்து முஸ்­லிம்­க­ளையும் தாக்க முயற்­சிக்­கின்­றனர்.
முஸ்­லிம்கள் மீது அடக்கு முறை மேற்­கொள்­ளப்­படும் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முஸ்லிம் சமூகம் அமை­தி­யாக செயற்­பட்டு சரி­யான முடி­வு­களை எடுத்­தனர். தாம் எப்­போதும் சரி­யான பாதையில் செல்வோம் என்­பதை பௌத்த பேரி­ன­வா­தி­க­ளுக்கு விளங்­கப்­ப­டுத்தி விட்­டனர்.
இந்த நாட்டில் தமிழ் - சிங்­கள மக்­க­ளி­டையே உள்ள உறவு முறைமை­யினை விடவும் சிங்­கள - முஸ்லிம் மக்­க­ளி­டையே உள்ள உறவு முறை பல­மா­னது. மத்­திய கிழக்கில் இருந்து முஸ்லிம் ஆட­வர்கள் இலங்­கைக்கு வந்த போது சிங்­கள பெண்கள் விருப்­பத்­துடன் மண முடித்து வாழ்ந்­தனர். அப்­போ­தி­ருந்து இன்று வரை சிங்­கள முஸ்லிம் மக்கள் ஒற்­று­மை­யான இன­மாக வாழ்­கின்­றனர்.
விடு­தலைப் புலி­களின் தாக்­கு­தலின் போதும் சிங்­க­ள­வர்­களே முஸ்­லிம்­களை பாது­காத்­தனர். அதேபோல் நாட்டில் தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழித்­தலில் முஸ்­லிம்­களின் பங்கும் மிக முக்­கி­ய­மா­னதே. சிங்­க­ள­வர்­க­ளிடம் இருந்து முஸ்­லிம்கள் ஒரு­போதும் பிரி­ய­வில்லை. எனவே இப்­போது ஒரு சில கார­ணங்­களைக் காட்டி நாட்டில் நூறு வரு­டங்­க­ளுக்கு முன் ஏற்­பட்ட சிங்­கள - முஸ்லிம் கல­வ­ரத்தை மீண்டும் இந்த நாட்டில் ஏற்­ப­டுத்தி விட வேண்டாம். யுத்­தத்தின் சுவை கண்ட அர­சாங்கம் இன்று யுத்தம் ஒன்று இல்­லா­ததன் கார­ணத்­தினால் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கின்­றது. கடந்த காலங்­களின் போது இந்த அர­சாங்கம் தமி­ழர்­களை பாது­காக்­கா­ததன் கர­ணத்­தி­னா­லேயே இன்று சர்­வ­தே­சத்தின் அழுத்தம் ஏற்­பட்­டுள்­ளது. எமக்கு எதி­ரி­யாக விடு­தலைப் புலிகள் இருந்­த­னரே தவிர தமிழ் மக்கள் ஒரு­போதும் எதி­ரிகள் அல்ல.
ஆனால் அர­சாங்கம் யுத்தம் தொடங்­கிய காலம் தொடக்கம் இன்று வரையில் தமி­ழர்கள் விட­யத்தில் தவ­றி­ழைத்துக் கொண்டே வந்­துள்­ளது. சர்­வ­தேசம் இந்த நாட்­டிற்குள் வரு­வதை நாட்டு மக்கள் எவரும் விரும்­ப­வில்லை. ஆனால் அர­சாங்­கமே சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஏற்ற அனைத்து வழி முறை­க­ளையும் செய்து கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.
யுத்தக் குற்­றங்­களை மட்­டுமே விசா­ர­ணைக்­காக எடுத்துக் கொண்ட சர்­வ­தேசம் இப்­போது முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல் பள்­ளி­வா­சல்கள் உடைப்பு ஆகிய பிரச்­சி­னை­க­ளையும் ஆதா­ர­மாகக் கொண்டு தமது விசா­ர­ணை­களை பலப்­ப­டுத்தி விட்­டது. எனவே இவை அனைத்­திற்கும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவுமே பொறுப்பு கூற வேண்டும்.
பாது­காப்பு செய­லாளர் பொது­ப­ல­சேனா அமைப்­புடன் தொடர்­பு­ப­ட­வில்லை என்றால் ஏன் பொது­பல சேனா அமைப்­பி­னரை இன்னும் கைது செய்­ய­வில்லை. அவ் அமைப்­பினர் இன­வா­தத்தை சுரண்டி சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கு எதி­ராக போரா­டு­கின்­றமை வெளிப்­ப­டை­யாகத் தெரிந்தும் அர­சாங்கம் இன்­னமும் பொது­ப­ல­சேனா அமைப்பை கைது செய்­யாது பாது­காப்­பி­னையும் உத­வி­க­ளையும் வழங்­கு­கி­றது. முஸ்­லிம்­களை அழிக்கும் செயற்­திட்­டத்தில் பாது­காப்பு அமைச்சும் பொது­ப­ல­சேனா அமைப்பும் செயற்­ப­டு­கின்­றது என்­பதே உண்மை. இதை அனைத்து முஸ்­லிம்­களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்­றார்.

Post a Comment

0 Comments