ஐசிஸ் கிளர்ச்சியாளர்களால் இஸ்லாமிய கலீபத் அல்லது பேரரசு அறிவிக்கப்பட்டது
'ரியா சட்டத்திற்கு முரணானது என்று கட்டாரை மையமாகக் கொண்டு இயங்கும்
முன்னணி இஸ்லாமிய அறிஞரான யு+சுப் அல் கர்ழாவி அறிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் நிலப்பகுதிகளை கைப்பற்றிய இஸ்லாமிய தேசம்
எனப்படும் ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தமது கட்டுப்பாட்டு பகுதி
யில் கலீபத்தை அறிவித்ததோடு புதிய கலீபா அல்லது முஸ்லிம் உலகின் தலைவராக
அந்த அமைப்பின் தலைவரான அபு+ பக்கர் அல் பக்தாதியை நிய மித்தது.
ஆனால் இஸ்லாமிய 'ரியா சட்டத்தின்படி இந்த அறிவிப்பு செல்லாது என்று யு+சுப்
அல் கர்ழாவி குறிப்பிட்டுள்ளார். "நாம் கலீபத் ஒன்றை விரைவில்
எதிர்பார்க்கிறோம். ஆனால் பிர கடனப்படுத்தப்பட்டிருக்கும் இஸ் லாமிய தேசம்
சிரிய எழுச்சி மற் றும் ஈராக்கில் இருக்கும் சுன் னிக்களுக்கு அபாயகரமான
விளை வை ஏற்படுத்தக்கூடியது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கலீபா என்பது ஒரு குழுவினாலன்றி முழு முஸ்லிம் தேசத்தால் வழங்கப்படுவது என்று கர்ழாவி விபரித்துள்ளார்.
0 Comments